Actress Bhavana : காரில் நடந்த பாலியல் கொடுமை குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்த பாவனா
Actress Bhavana : பாலியல் கொடுமைக்கு பின் கணவரும், குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தாலும் நான் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்ததாக நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பலவேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பாவனா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு படப்பிடிப்புக்கு சென்று வீடு திரும்பியபோது ஒரு கும்பல் இவரை கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் பல்சர் சுனில் என்பவரை கைது செய்தனர். அவர் மலையாள நடிகர் திலீப் தான் தங்களை இப்படி செய்யச் சொன்னதாக வாக்குமூலம் அளிக்க, பின்னர் போலீசார் திலீப்பையும் கைது செய்து விசாரணை நடத்தினர். தற்போது திலீப் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து முதன்முறையாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் நடிகை பாவனா. அதில் அவர் கூறி இருப்பதாவது: என் கண்ணியம் சுக்குநூறானது. தன்னம்பிக்கையால் தான் தைரியமாக இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் தொடர்ந்து போராடுவேன். என் கணவரும், குடும்பத்தினரும், நண்பர்களும் எனக்கு ஆறுதலாக இருந்தாலும் நான் தனிமையில் இருப்பது போலவே உணர்ந்தேன்.
2020-ம் ஆண்டு 15 நாட்கள் நான் நீதிமன்றத்துக்கு சென்றேன். காலை முதல் மாலை வரை அங்கேயே அமர்ந்து என் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிக்க 7 வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறினேன். அந்த சம்பவத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. ஜெயசூர்யா, பிரித்விராஜ், ஷாஜி கைலாஷ், ஆசிக் அபு உள்ளிட்டவர்களை தவிர பிறரெல்லாம் என்னை ஒதுக்கி வைத்தனர்” என பாவனா கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Poonam Pandey : என் புருஷன் நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் - கதறிய கவர்ச்சி நடிகை... கண்கலங்கிய ரசிகர்கள்