- Home
- Cinema
- Anushka Property value : யம்மாடியோ.... அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? - லீக்கான விவரங்கள்
Anushka Property value : யம்மாடியோ.... அனுஷ்காவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? - லீக்கான விவரங்கள்
கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவின் (anushka) சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில், டாப் ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைவருடனும் நடித்துள்ளவர் அனுஷ்கா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் தேவசேனையாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட அனுஷ்கா, அப்படத்துக்கு பின் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
பின்னர் தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த அனுஷ்கா, சைலன்ஸ் என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். இதில் காது, கேட்காதா, வாய் பேச முடியாத பெண்ணாக அனுஷ்கா நடித்திருந்தார்.
சவாலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும், இப்படம் அவருக்கு சறுக்கலை தான் தந்தது. இப்படம் கடும் தோல்வியை சந்தித்ததால், கடந்த ஓராண்டுக்கு மேலாக பட வாய்ப்பு இன்றி தவித்து வந்த அனுஷ்காவுக்கு அண்மையில் தான் ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி அவருக்கு ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் தெரிவிக்கபட்டு உள்ளது.
அனுஷ்காவுக்கு பெங்களூரு, ஐதராபாத் போன்ற முன்னணி நகரங்களில் பல சொகுசு வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரியல் எஸ்டேட் துறையிலும் அவர் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளாராம்.
இதுதவிர பி.எம்.டபிள்யூ, ஆடி போன்ற விலை உயர்ந்த சொகுசு ரக கார்கள் சிலவற்றையும் சொந்தமாக வைத்துள்ளார் அனுஷ்கா (anushka). அவருக்கு தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் வரத் துவங்கி உள்ளதால் அடுத்த ஆண்டில் சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்கின்றனர்.