- Home
- Cinema
- Anushka new movie : விஜய் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய அனுஷ்கா... மீண்டும் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்
Anushka new movie : விஜய் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய அனுஷ்கா... மீண்டும் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்
Anushka new movie : நீண்ட நாட்களுக்கு பின் அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆன நடிகை அனுஷ்காவுக்கு தற்போது தமிழ் பட வாய்ப்பு ஒன்றும் கிடைத்துள்ளது.

தமிழில், டாப் ஹீரோக்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித் என அனைவருடனும் நடித்துள்ளவர் அனுஷ்கா (Anushka). தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் தேவசேனாவாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட அனுஷ்கா, அப்படத்துக்கு பின் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
பின்னர் தீவிர உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த அனுஷ்கா, சைலன்ஸ் (Silence) என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார். இதில் காது, கேட்காத, வாய் பேச முடியாத பெண்ணாக அனுஷ்கா நடித்திருந்தார். சவாலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தாலும், இப்படம் அவருக்கு சறுக்கலை தான் தந்தது. இப்படம் கடும் தோல்வியை சந்தித்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பட வாய்ப்பு இன்றி தவித்து வந்தார் அனுஷ்கா.
நீண்ட நாட்களுக்கு பின் அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆன அவருக்கு தற்போது தமிழ் பட வாய்ப்பு ஒன்றும் கிடைத்துள்ளது. அதன்படி தமிழில் அவர் நடிக்க உள்ள புதிய படத்தை ‘தலைவி’ பட இயக்குனர் விஜய் (AL Vijay) இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்கத்தில் ஏற்கனவே தெய்வத் திருமகள், தாண்டவம் போன்ற படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, தற்போது 3-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.
இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக நடிகர் விஜய் சேதுபதி (Vijay sethupathi) நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... Nayanthara New car :புது காருடன் பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.