பெட் ரூமில் தினுசு தினுசா போஸ் கொடுத்து... ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஆண்ட்ரியா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
நடிகை ஆண்ட்ரியா, ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் அணிந்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வட சென்னை என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் ஆண்ட்ரியா.
நடிப்பைப் போல் பாடகியாகவும் திரையுலகில் ஜொலித்து வருகிறார் ஆண்ட்ரியா. அண்மையில் புஷ்பா படத்திற்காக இவர் பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
தற்போது இவர் கைவசம் மிஸ்கினி பிசாசு 2 படம் உள்ளது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதுதவிர துப்பாக்கி முனை படத்தின் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் பேண்டஸி படம் ஒன்றில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.
இப்படத்தில் அவர் கடல் கன்னியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் ஆண்ட்ரியா. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவரை 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடும் ஆண்ட்ரியா, தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற டீசர்ட் அணிந்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.