கேரளத்து சேலையில் தேவதையாக மிளிரும் அமலாபால்... வைரலாகும் ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட்
Amala Paul : ஓணம் ஸ்பெஷலாக கேரளத்து சேலையில், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை அமலாபால்.
தமிழில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்று இவரும் கேரளத்து வரவு தான். இவரை பாப்புலர் ஆக்கியது தமிழ் படங்கள் தான்.
இதையடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களில் பணியாற்றிய அமலாபால், அவர் மீது காதல் வயப்பட்டார். பின்னர் 2014-ம் ஆண்டு அவரையே திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை மூன்றே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை முறைப்படி விவாகரத்து செய்து பிரிந்த அமலாபால், அதன்பின் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதன்பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அமலாபால். சமீபத்தில் கூட கடாவர் என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.
இதையும் படியுங்கள்... மருதநாயகம் தொடக்கவிழா... இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது - ராணி எலிசபெத் மறைவுக்கு கமல் இரங்கல்
இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தான் இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்காததால், இப்படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை என்கிற பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமலாபால்.
இவ்வாறு எதையும் வெளிப்படையாக பேசும் துணிச்சல் மிகுந்த நாயகியாக வலம் வரும் அமலாபால், நேற்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியது மட்டுமின்றி அதற்காக ஸ்பெஷல் போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி உள்ளார்.
ஓணம் ஸ்பெஷலாக கேரளத்து சேலையில், விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஜெனியும் இப்படி பண்ணிட்டாங்களே ... போட்டியில் ஜெயிப்பாரா பாக்கியா? பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..