15 வருஷமா அவர் கூட ரிலேஷன் ஷிப்பில் இருக்கேன்! காதலை ஓப்பனாக கூறிய அபிநயா!
தனக்கு காதலன் இருப்பதாகவும், இனிமேல் தன்னை பற்றி யாரும் காதல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகை அபிநயா கேட்டுக் கொண்டுள்ளார்.

தெலுங்கில் அறிமுகமாகும் நடிகை அபிநயா
2008-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான Neninthe என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் அபிநயா. அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் 2009-ஆம் ஆண்டு சமுத்திர கனி இயக்கத்தில் வெளியான 'நாடோடிகள்' படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது , சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது உட்பட பல விருதுகளை பெற்றார்.
நாடோடிகளுக்கு முன் அபிநயாவுக்கு தமிழில் கிடைத்த வாய்ப்புகள்
இந்தப் படம் கொடுத்த வரவேற்பு காரணமாக அபிநயாவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஜீனியஸ், வீரம், பூஜை, தாக்க தாக்க, விழித்திரு, மார்க் ஆண்டனி என பல படங்களில் வரிசையாக நடித்தார்.
சந்தானத்தின் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி அபிநயா நடிப்பில் வெளியான பணி படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு பெரியளவில் வரவேற்பு பெற்றது. திரையரங்கில் வெளியான இந்த படம் சமீபத்தில் ஓடிடி தளமான சோனி லிவ்வில் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
அபிநயா நடித்த பணி படத்தின் வெற்றி
இந்த படத்தின் சக்ஸஸ் மீட்டில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறு வயதில் இருந்தே காது மற்றும் வாய் பேசமுடியாத சிறப்பு குழந்தையாக இவர் பிறந்த இவர் தன்னுடைய தன்னபிக்கை காரணமாகவே தற்போது, ஒரு நடிகையாக ஜொலித்து வருகிறார். இவரின் பெற்றோரும் இவரின் ஆசைக்கு துணை நின்றது இவரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என கூறலாம்.
கடற்கரையில் ஹாட் உடையில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை திவ்யபாரதி!
மற்ற நடிகர்களுடன் இணைத்து பேச வேண்டாம்:
பொதுவாகவே திரையுலகில் பிரபலமாக இருப்பவர்கள் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வெளியாவது சகஜமான ஒன்று தான். இதற்க்கு அபிநயாவும் விதி விளக்கு அல்ல. அபிநயாவை விஷாலுடன் இணைந்து கடந்த ஆண்டு கிசுகிசு ஒன்று எழுந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சிலர் சமூக வலைத்தளத்தில் கொளுத்தி போட அது கொளுந்து விட்டு எரிந்தது.
ரிலேஷன் ஷிப்பில் இருப்பதை ஒப்புக்கொண்ட நடிகை அபிநயா
இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அபிநயா முதல் முறையாக தன்னுடைய காதல் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். " கடந்த 15 வருடங்களாகவே ரிலேஷன் ஷிப்பில் உள்ளதாக அபிநயா கூறியுள்ளார். அவர் என்னுடைய சிறு வயது நண்பர். எங்களுக்கே தெரியாமல் நாங்கள் இருவரும் உறவிற்குள் வந்து விட்டோம். இனிமேல் என்னை எந்த ஒரு நடிகருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என கூறியுள்ளார். கூடிய விரைவில் அபிநயாவின் திருமணம் செய்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகூர்த்தக்கால் நட்டாச்சு! ரம்யா பாண்டியன் வீட்டில் மற்றொரு திருமணம் - குவியும் வாழ்த்து!