- Home
- Cinema
- Actor Vivek Road : நடிகர் விவேக் பெயருடன் கூடிய சாலை திறப்பு - சொன்னதை செய்த முதல்வருக்கு குவியும் பாராட்டு
Actor Vivek Road : நடிகர் விவேக் பெயருடன் கூடிய சாலை திறப்பு - சொன்னதை செய்த முதல்வருக்கு குவியும் பாராட்டு
Actor Vivek Road : விவேக்கின் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்டப்பட்டதை அடுத்து அதுகுறித்த அரசாணையும் அண்மையில் வெளியிடப்பட்டது.

தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நட்சத்திரமாக வலம் வந்தவர் விவேக். இயக்குனர் சிகரம் பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட விவேக், தனது படங்களில் நகைச்சுவையோடு, சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும் கூறி தனக்கென தனி பாணியை உருவாக்கினார். இதனால் இவரது நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.
கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் விவேக்கிற்கு கடந்த 2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதுதவிர சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில அரசு விருதுகளை பல முறை வென்றுள்ளார் விவேக். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீது அளாதி அன்பும், பிரியமும் கொண்டிருந்த விவேக், தமிழகம் முழுவதும் 1 கோடி மரம் நடும் திட்டத்தை செயல்படுத்தினார்.
நடிகர் விவேக் கடந்தாண்டு ஏப்ரல் 17-ந் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு திரையுலகினர் மட்டுமின்றி அவரது ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனிடையே நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நடிகர் விவேக்கின் மனைவி, தங்களது வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக்கின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அவரின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுத்து, விவேக்கின் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட உத்தரவிட்டார். இதுகுறித்த அரசாணையும் அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சின்னக் கலைவாணர் விவேக் சாலை என்ற எழுதப்பட்டிருந்த பெயர் பலகை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்ரமணியம் கலந்து கொண்டு அந்த பெயர் பலகையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது நடிகர் விவேக்கின் மனைவி, மகள்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர். சொன்னதை சொன்னபடி செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... Vaadivaasal:வாடிவாசலுக்கு வந்த புது சிக்கல்! வெற்றிமாறனை வெயிட் பண்ண சொல்லிட்டு புது கூட்டணியில் இணைந்த சூர்யா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.