மீண்டும் காதலில் விழுந்த விஷால்... விரைவில் கல்யாணம்! - பொண்ணு யார் தெரியுமா?
vishal : இரண்டு முறை காதல் தோல்விக்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகர் விஷால், திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால், இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் சரிவர போகாததால், தற்போது ஹிட் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இவர் நடிப்பில் தற்போது லத்தி திரைப்படம் தயாராகி உள்ளது. அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். நந்தா மற்றும் ரமணா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்... நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்-1' பட டீசர்.. வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!!
நடிகர் விஷாலுக்கு வயது 40-ஐ கடந்த போதிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் சில வருடங்களில் இந்த காதல் பிரேக் அப் ஆனது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலை முறித்துக்கொண்டனர்.
இதையும் படியுங்கள்... அடுத்த முதல்வர் இவர் தான்..சூசகமாக ட்வீட் போட்ட பார்த்திபன்!
இதன்பின்னர் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை காதலித்தார் விஷால், இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என்பதில் தீர்க்கமாக இருந்த விஷால் திருமணத்தை தள்ளிப்போட்டு வந்தார். இதனால் அனிஷா உடனான திருமணமும் நிறுத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்... கவர்ச்சியாக பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு ஆப்பு வைக்கும் கிரண்... போன் போட்டா என்ன நடக்குது தெரியுமா?
இதையடுத்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த விஷால், திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி அப்பா, அம்மா பாக்குற பொண்ணு எனக்கு செட் ஆகுமான்னு தெரியல. நிச்சயம் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன். இப்போ லவ் பண்ணிட்டு தான் இருக்கேன். விரைவில் அந்த பொண்ணு யார்னு சொல்றேன்” என கூறி உள்ளார்.