நாளை வெளியாகும் 'பொன்னியின் செல்வன்-1' பட டீசர்.. வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!!
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான, 'பொன்னியின் செல்வன் பாகம் -1 ' செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பட குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான, 'பொன்னியின் செல்வன் பாகம் -1 ' செப்டம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை பட குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்னும் நாவலை அடிப்படையாக கொண்டு, இந்த படத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள்: டைட் ஷர்ட் அணிந்து... ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!! அதகள போட்டோஸ்!!
இதுகுறித்து பொன்னியின் செல்வன் பட குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவித்துள்ளதாவது... "அன்புள்ள பத்திரிக்கை துறை, தொலைக்காட்சி, வானொலி, இணைய நண்பர்களே... எங்களது 'பொன்னியின் செல்வன் பாகம் 1'. திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா வரும் ஜூலை 8-ம் தேதி 2022 அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் நீங்கள் கலந்து கொண்டு, உங்கள் நல்வாழ்த்துக்கள் எங்களுக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் செய்திகள்: பேன்ட் போட மறந்துடீங்களா? சட்டை மட்டும் அணிந்து வாழைத்தண்டு கால்களை காட்டி வாயடைக்க செய்த மீரா ஜாஸ்மின்!
'பொன்னியின் செல்வன் பாகம் 1', செப்டம்பர் 30ஆம் தேதியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது. 1950 களில் பத்திரிக்கை தொடராக வெளிவந்து, இன்றளவும் எல்லோராலும் விரும்பிப் படிக்கப்படும் அமர கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் உருவாக்கியுள்ளார்.
பொன்னியின் செல்வன் 10 ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் அரியணைக்காக நிகழ்ந்த உட்புசல்களையும், துரோகங்களையும், தியாகங்களையும், அடிப்படையாகக் கொண்டு இளவரசன் அருண்மொழிவர்மன், பேரரசன் ராஜ ராஜனாக பதவி ஏற்ற சோழர்களின் பொற்காலத்தை உருவாக்கும் முன் நிகழும் ஒரு சுவாரசியமான சாகச கதை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தாவின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க..!
மேலும் இந்த படத்தின் புரொமோஷன் பணிகளை துவங்கிவிட்ட 'பொன்னியின் செல்வன்' படக்குழு... வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி, கரிகாலனாக நடிக்கும் விக்ரம், நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய், மற்றும் குந்தவையாக நடிக்கும் திரிஷா ஆகியோரின் லுக்கை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா, நாளை மாலை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.