Vishal Marriage: 45 வயதில் பிரபல நடிகையுடன் விஷாலுக்கு மலர்ந்த காதல்? விரைவில் திருமணமா.. தீயாய் பரவும் தகவல்!
நடிகர் விஷாலுக்கும், பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஷால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எதுவும், பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும், அடுத்ததாக இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் 'லத்தி' படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்
Vishal
மேலும் 'துப்பறிவாளன் 2' படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் ஒரு சில காரணங்களால் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பமாகமல் உள்ளது. இதற்க்கு இடையே... 'மார்க் ஆண்டனி' என்கிற படத்தில் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. தற்போது விஷால் நடித்து முடித்துள்ள 'லத்தி' திரைப்படம், இந்த வருடத்திலேயே வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் செய்திகள்: தேவலோக ரம்பை போல் மாறிய குட்டி நயன் அனிகா..! கண்ணாடி முன் அமர்ந்து... அழகை வெளிப்படுத்திய அசத்தல் போட்டோஸ்!
நடிகர் விஷாலுக்கு 45 வயது ஆகும் நிலையிலும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை விஷால் காதலித்து வந்த நிலையில், திடீரென இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்தனர்.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவரை விஷால் காதலித்ததாக கூறப்பட்டது. எனவே இருதரப்பு பெற்றோர் சம்மதத்துடன் அனிஷா ரெட்டி மற்றும் விஷால் ரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் மிகப் பிரமாண்டமாக நடந்த நிலையில், திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திருமணத்திற்கு முன்பே பிரிந்தனர்.
மேலும் செய்திகள்: மனைவி ஷாலினியுடன்.. துணிவு பட லுக்கில் அஜித் கொண்டாடிய தீபாவளி! வைரலாகும் போட்டோஸ்!
மேலும் விஷாலின் தந்தை விரைவில் விஷாலுக்கு பிடித்த பெண்ணுடன் திருமண நடக்கும் எனக் கூறியிருந்தார். அதேபோல் விஷாலும் அப்பா, அம்மா, பார்க்கிற பெண்ணெல்லாம் எனக்கு செட் ஆகுமா என்று தெரியவில்லை? நிச்சயம் லவ் மேரேஜ் தான் பண்ணுவேன் என அடித்துக் கூறினார். இந்நிலையில் விஷால் தன்னுடன் பூஜை படத்தில் நடித்த நடிகை அபிநயாவை காதலித்து வருவதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர்கள் இருவரும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை விஷாலும், அபிநயாவின் பரப்பும் தான் கூற வேண்டும்.
மேலும் செய்திகள்: தீபாவளி ஸ்பெஷல்... கைகளை குத்த வைத்து குளுகுளு கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே..! ஸ்டன்னிங் ஹாட் போட்டோஸ்!