பிரபல நடிகரின் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திக் கொண்ட விஷால்... வெறித்தனமான ரசிகரா இருப்பாரு போல..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தன் நெஞ்சில் பிரபல நடிகரின் உருவத்தை டாட்டூவாக குத்தி உள்ளார்.
நடிகர் விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகி வருகிறது. திரிஷா இல்லேனா நயன்தாரா படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மாவும், வில்லனாக எஸ்.ஜே சூர்யாவும் நடித்து வருகின்றனர்.
இதுதவிர துப்பறிவாளன் 2 படத்தையும் இயக்க ஆயத்தமாகி வருகிறார் விஷால். மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்னர் துப்பறிவாளன் 2 ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் மூலம் விஷால் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். இதன் காரணமாக சமீபத்தில் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அதனை ஏற்க மறுத்தார் விஷால்.
இதையும் படியுங்கள்... வாய்ப்புக்காக இப்படியா? குட்டை டவுசரில் கவர்ச்சி போஸ் கொடுத்த லாஸ்லியாவை கமெண்டில் தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!
இந்நிலையில், நடிகர் விஷால் தன் நெஞ்சில் தற்போது புதிதாக டாட்டூ ஒன்றை குத்தி உள்ளார். அதுகுறித்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் உருவத்தை தான் தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார் விஷால்.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராம் விஷால். அவர் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரது உருவத்தை தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறாராம். இதைப்பார்த்த ரசிகர்கள், விஷால், எம்.ஜி.ஆரின் வெறித்தனமான ரசிகராக இருப்பார் போல சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 26 வயசு தான் ஆகுது... படப்பிடிப்பில் மயங்கி விழுந்து இறந்துவிட்டான் - நண்பனின் மறைவால் கலங்கிய ஷாந்தனு