வாணி போஜனை கட்டி அணைத்தபடி அமர்ந்திருக்கும் விக்ரம்! அப்போ துருவுக்கு ஜோடி இல்லையா? வைரலாகும் போட்டோஸ்..
நடிகர் விக்ரம் (Vikram ) முதல் முறையாக மகன் துருவுடன் (Dhruv) இணைந்து நடித்துள்ள 'மகான்' (Mahaan) படத்தில் இருந்து ஒர்கிங் ஸ்டில்ஸ் மற்றும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
முதல் முறையாக நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ், இருவரும் இணைந்து 'மகான்' படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை, இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் (Karthick Suburaj) இயக்குகிறார்.
'மகான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அவ்வப்போது, 'மகான்' குறித்த புகைப்படங்கள் மற்றும் மற்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இப்படத்தில், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்ரம் வாணி போஜனை கட்டி பிடித்து அமர்ந்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
அப்போது சிம்ரன் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கவில்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.....
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான, விக்ரம் மற்றும் துருவ் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்றைய தினம் லிரிகள் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.
சூறையாட்டம் லிரிகள் வீடியோ... 24 மணி நேரத்திற்குள் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தற்போது வெளியாகியுள்ள ஒர்கிங் ஸ்டில்ஸ் புகைப்படங்களும் தாறுமாறாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது .