தளபதியின் 'சச்சின்' ரீ-ரிலீஸில் இதுவரை செய்துள்ள மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் வசூல் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சச்சின் வசூல்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் நடிப்பில், 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன சச்சின் திரைப்படம், ரிலீஸ் ஆகி 20 வருடங்கள் ஆவதை சிறப்பிக்கும் விதமாக, ஏப்ரல் 18 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் புக் மை ஷோ மூலம் 59,000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை சச்சின் வசூல் 11 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Vijays Sachein Movie
காதல் மற்றும் காமெடி கதைக்களத்தில் வெளியான சச்சின்
காதல் மற்றும் காமெடி கதையம்சத்துடன் ரிலீஸ் ஆன இந்த படத்தில் தளபதி விஜய் சச்சின் என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க, ஜெனிலியா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். பிபாஷா பாசு, வடிவேலு, சந்தானம், ரகுவரன், தலைவாசல் விஜய், மோகன் சர்மா, பேபி சர்மி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
நடிகர் விஜய்யின் ‘இந்த’ பிளாக்பஸ்டர் ஹிட் படம் முழுக்க முழுக்க பஹல்காமில் படமாக்கப்பட்டதா?
Jana Nayagan Director H vinoth
ஜனநாயகன்:
விஜய்யின் அடுத்த படமான 'ஜனநாயகன்' படத்தை தற்போது, இயக்குனர் எச் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. வெங்கட் கே நாராயணன் தனது கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜனநாயகம் படத்தை தயாரித்து வருகிறார்.
Jana Nayagan
விஜய்யின் காட்சி இந்த மாதத்தில் முடிவடையும்:
இந்த படத்தை, அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே போல், இப்படத்தில் விஜய்யின் பகுதி ஏப்ரல் மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.