Biggboss Tamil 5: பிக்பாஸ் வீட்டிற்குள் வயல் கார்டு எண்ட்ரியாக நுழைகிறாரா விஜய்யின் நண்பர்? யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 5 (Biggboss seasson 5) நிகழ்ச்சி தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதில் வயல் கார்டு (Wild card contestant) போட்டியாளராக விஜய்யின் நண்பர் (Actor vijay friend) எண்ட்ரியாக உள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி அமோகமாக துவங்கியது. கடந்த நான்கு சீசனை விட, போட்டியாளர்கள் தேர்வு இந்த முறை வித்தியாசமாகவே இருந்தது. அதே போல் எப்போதும் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் நிலையில் இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றனர்.
முதல் வாரத்தில் எந்த எலிமினேஷனும் இல்லை என்றாலும், தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து வெளியேறினார் என பிக்பாஸ் அறிவித்தார்.
இவர் வெளியேறியதற்கான காரணம், தாமரை தான் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய நமீதா, அவருக்கும் தான் வெளியேறியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
பின்னர், இரண்டாவது வாரத்தில் நாடியா சாங்கும், 3 ஆவது வாரத்தில் அபிஷேக் ராஜாவும், 4 ஆவது வாரத்தில் சின்ன பொண்ணு , கடந்த வாரம் பிரபல மாடல் அழகி சுருதி என இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
எனவே இனி வரும் வாரங்களில், பிக்பாஸ் போட்டியில் வயல் கார்டு எண்ட்ரியாக சில போட்டியாளர்கள் நுழைய வாய்ப்புள்ளது.
இதுகுறித்த தகவல்கள் தான் தற்போது, வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது முதல் வயல் கார்டு போட்டியாளராக பிரபல நடிகர் விஜய்யின் உயிர் நண்பர்களில் ஒருவரான சஞ்சீவ் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் சின்ன திரையில் சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவும் கலக்கி வருபவர். அதே போல்... பல வெள்ளித்திரை படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.