Vijay Vs Ajith: ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் - அஜித் படங்கள் என்னென்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் தனக்கென அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட, விஜய் மற்றும் அஜித் நடிப்பில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் வேட்டை நடத்திய, படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Mankatha movie:
மங்காத்தா:
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான மிரட்டலான மாஸ் திரைப்படம் தான் 'மங்காத்தா'. இந்த படத்தில் நடிகை த்ரிஷா ஹீரோயினாக நடிக்க, அர்ஜுன், ராய் லட்சுமி , அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் தயாநிதி அழகிரி மற்றும் விவேக் ரத்னவேல் ஆகியோர் கிளவுட் நைன் மூவிஸ் பேனரின் கீழ் இந்த படத்தை தயாரித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு, அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆனது.
Actor Ajith starrer hit film Billa
பில்லா:
அஜித்துக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படங்களில் ஒன்று 'பில்லா'. 2007 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை, இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரபு, ரஹ்மான், நயன்தாரா, நமீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் எல். சுரேஷ் மற்றும் அப்துர்ரஹ்மான் ஆகியோர் தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dheena Movie
தீனா:
கடந்த ஆண்டு அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் தீனா. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2001-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படம், திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லைலா நடிக்க, சுரேஷ் கோபி, பாலா சிங், வைஷ்ணவி, நக்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரீ-ரிலீஸின் போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Vijay starrer Gilli film
கில்லி:
தளபதி விஜய், பிரபல இயக்குனர் இயக்குனர் தரணி இயக்கத்தில் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. திரிஷா ஹீரோயினாக நடித்திருந்த இந்த திரைப்படம், 'ஒக்கடு' என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. விஜய்க்கு முதல் 50 கோடி வசூலை பெற்று தந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பிரகாஷ் ராஜ் முரட்டு வில்லனாக நடித்திருந்தார். இந்த படம், கடந்த ஆண்டு ரீ-ரிலீஸ் ஆகி 32 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Kushi Film
குஷி:
கடந்த ஆண்டு நடிகர் விஜய்யின் இரண்டாவது ரீ-ரிலீஸ் படமாக குஷி மே 19 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை எஸ் ஜே சூர்யா இயக்க, விஜய் மற்றும் ஜோதிகா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து, எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் விஜயகுமார், ஷில்பா ஷெட்டி, மும்தாஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் மே 2024 அன்று வெளியான போதிலும், கில்லி பட ரீ ரிலீஸ் வசூலை முறியடிக்க தவறி விட்டது.
Thalapthy Vijay Sachin Re Release
சச்சின்:
இதை தொடர்ந்து விஜய் நடிப்பில், கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சச்சின் திரைப்படம் இப்போது ரீரிலீசுக்கு தயாராகி உள்ளது. தாணு வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்திருந்த இந்த படத்தை ஜான் மகேந்திரன் தயாரித்திருந்தார். இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில், வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜெனிலியா நடித்திருந்தார். மேலும் வடிவேலுவின் காமெடியும் அதிகம் ரசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
3 முதல் பாபா வரை; ரீ-ரிலீஸில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிளாப் படங்கள் ஒரு பார்வை