3 முதல் பாபா வரை; ரீ-ரிலீஸில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பிளாப் படங்கள் ஒரு பார்வை
ரஜினி நடித்த பாபா முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படம் வரை ரீ-ரிலீஸில் ஹிட்டான தமிழ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரீ-ரிலீஸில் ஹிட்டான பிளாப் படங்கள்
ரீ-ரிலீஸ் கலாச்சாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறது. நட்சத்திர நடிகர்களின் பிறந்தநாளுக்கு மட்டும் அவர்களின் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்த நிலைமை மாறி, ரிலீஸின் போது பிளாப் ஆகி பின்னாளில் சோசியல் மீடியாவில் அதிகம் கொண்டாடப்பட்ட படங்களை படிப்படியாக ரீ-ரிலீஸ் செய்ய தொடங்கினர். அவ்வாறு ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் வசூலிலும் சாதனை படைத்துள்ளன. அந்த படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
ஆயிரத்தில் ஒருவன்
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் வரலாற்று கதையம்சத்துடன் தயாராகி இருந்தது. அந்த காலகட்டத்தில் ரசிகர்களுக்கு இப்படம் புரியாமல் போனதால் தோல்வியை சந்தித்தது. பின்னர் போகப்போக அப்படத்தில் உள்ள ஆச்சர்யமூட்டும் கதைகள் படிப்படியாக டீகோடு செய்யப்பட்டு, இப்படம் தற்போது ரிலீஸ் ஆனால் ஹிட் அடிக்கும் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசி வந்தனர். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கடந்த 2020 ஆண்டு டிசம்பர் மாதம் ரீ ரிலீஸ் ஆனது. இப்படத்தை தியேட்டரில் சென்று பார்த்து ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்படம் ரீ ரிலீஸில் ரூ.1.5 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதையும் படியுங்கள்... வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்த்துடுங்க.. மிஸ் பண்னவே கூடாத அண்டர்ரேட்டட் தமிழ் படங்கள் இதோ
3 படம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த படம் 3. இப்படம் கடந்த 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரிலீசுக்கு முன்னர் வரை இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில் இப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் உலகளவில் ஹிட் அடித்தது. அப்பாடலால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை அப்படம் பூர்த்தி செய்யாததால் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இப்படம் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் ரீ-ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியது. முதலில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் ஆன இப்படம் அங்கு 2 கோடிக்கு மேல் வசூலித்தது. பின்னர் தமிழில் ரீ-ரிலீஸ் ஆகி 1.5 கோடி வசூலை வாரிக்குவித்தது.
பாபா
நடிகர் ரஜினிகாந்தின் கெரியரில் மிகப்பெரிய தோல்வியை தழுவிய படம் என்றால் அது பாபா. கடந்த 2002-ம் ஆண்டு வெளியான இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். இப்படம் வெளியான சமயத்தில் ரஜினி அரசியலுக்கு வர உள்ளதாக பேச்சு இருந்ததால், படத்திலும் அரசியல் வசனங்கள் தூக்கலாக வைக்கப்பட்டு இருந்தன. இதையெல்லாம் நம்பி போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் 1 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. பின்னர் கடந்த 2023-ம் ஆண்டு ரஜினியின் பிறந்தநாளுக்கு பாபா படம் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ரீ-ரிலீசின் போது முதல் நாளே ரூ.1.4 கோடி வசூலித்து மாஸ் காட்டியது பாபா திரைப்படம்.
ஆளவந்தான்
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் ஆளவந்தான். கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா தான் இயக்கி இருந்தார். இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் கதை புரியாததால் படம் பிளாப் ஆனது. இதையடுத்து 22 ஆண்டுகளுக்கு பின் ஆளவந்தான் திரைப்படத்தை சுமார் 1000 தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்தனர். அப்போது ரஜினியின் முத்து படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1 கோடி வசூலை வாரிக்குவித்து வெற்றிநடை போட்டது.
இதையும் படியுங்கள்... ஆளவந்தான் முதல் அசுரன் வரை - திரைப்படமாக உருவாக்கப்பட்ட ஹிட் நாவல்கள்!