தளபதியின் 66 ஆவது பட நாயகி இவரா? அப்போ வேற லெவல் தான்..!
தளபதி விஜய் (Vijay) தற்போது 'பீஸ்ட்' (Beast movie) படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள 66 ஆவது படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள ஹீரோயின் (Heroine) குறித்த தகவல் ஒன்று, தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
தளபதி விஜய் தற்போது 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' (Doctor Movie) ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் (Nelson Dilip Kumar) இயக்கத்தில் முதல்முறையாக இணைந்து 'பீஸ்ட்' (Beast Movie) படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்திய படக்குழு, இரண்டு, மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினர். நான்காவது கட்ட படப்பிடிப்புக்காக, சமீபத்தில் டெல்லி சென்ற படக்குழு, படப்பிடிப்பை முடித்து கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தேவையான பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் நிறைவடைவதற்கு முன்பாகவே, தளபதி விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சமீபத்தில் வெளியிட்டனர்.
விஜயின் 66 வது படமாக உருவாகும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இந்த இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தன்னுடைய ஏற்கனவே அறிக்கை மூலம் தெரிவித்த நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிப்பார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அந்த வகையில் அடுத்தடுத்து பல நடிகைகள் பெயர் இந்த லிஸ்டில் இடம்பெற்றது. சில நாட்களுக்கு முன்பு கூட, நடிகை கீர்த்தி சுரேஷ் 3 ஆவது முறையாக விஜய்யுடன் ஹீரோயினாக இணைய உள்ளதாக கூறப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள தகவலில் விஜய்க்கு ஜோடியாக, பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.