யாருக்கும் தெரியாத நடிகர் என்பதால் 4 வருஷமா? மெமரீஸ் டிரைலர், ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள மெமரீஸ் படத்தின் ரிலீஸ் மற்றும் டிரைலர் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெமரீஸ்
தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் வெற்றி. பெயரிலேயே வெற்றியை கொண்ட இவருக்கு தமிழ் சினிமா வரவேற்பு கொடுத்த தா என்றால் இல்லை. எனினும், தனது விடா முயற்சியால் ஜீவி, வனம், ஜோதி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவான அடுத்த படம் மெமரீஸ்.
மெமரீஸ் டிரைலர்
அறிமுக இயக்குநர் ஷியாம் மனோகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வெற்றிக்கு ஜோடியாக பார்வதி அருண் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ஹரிஷ் பெராடி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார்.
மெமரீஸ் ரிலீஸ் தேதி
முழுக்க முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படம் வெளியாக இருந்தது. ஆனால், ஏதோ ஒரு சில காரணங்களுக்காக இந்தப் படம் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில், இந்தப் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 10 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக இந்தப் படத்தின் டிரைலர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது.