5 நாய்களுக்கு நடுவே... வைகைப்புயல் வடிவேலு வெளியானது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' ஃபர்ஸ்ட் லுக்..!
வைகை புயல் வடிவேலு (Vadivelu) இயக்குனர் சுராஜ் (Director Suraj) இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' (Naai Sekar Returns)என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, தற்போது ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு சமீபத்தில் நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் பழைய உச்சாகத்தோடு வடிவேலு திரைப்படங்கள் நடிக்க தயாராகியுள்ளார். கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்தே வடிவேலு, இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'நாய் சேகர்' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த ஆண்டு தன்னுடைய பிறந்தநாளை கூட, வடிவேலு 'நாய் சேகர்' படக்குழுவினருடன் தான் கொண்டாடி மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
மேலும் உயிர் உள்ளவரை மக்களை மகிழ்விப்பதற்காக நடித்து கொண்டே இருப்பேன். சிறு குழந்தைகள் கூட தன்னை போல் முகத்தை பாவனை செய்யும் போது, இது தனக்கு கிடைத்த வரமாகவே பார்ப்பதாக உணர்வு பூர்வமாக கூறி நெகிழ வைத்தார்.
வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பெயர் 'நாய் சேகர்' என்று கடந்த இரண்டு வருடங்களாகவே ஒரு தகவல், உலா வந்தாலும் இதனை படக்குழுவினர் முறையாக தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யாமல் இருந்த காரணத்தால் இந்த படத்தின் தலைப்பை நடிகர் சதீஷ் நடித்து வரும் படத்திற்கு சூட்டினர்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் முறையாக இந்த படத்தின் தலைப்பை, தயாரிப்பாளர் சங்கத்திலும் பதிவு செய்தது. சதீஷுடன் ஒரு நாளையும் நடிக்க உள்ளதால் இந்த படத்திற்கு, 'நாய் சேகர்' என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதாலேயே வைத்துள்ளதாக படக்குழு கூறி, அவசர அவரசமாக ஃபர்ஸ்ட் லூக்கையும் வெளியிட்டது.
முட்டி மோதி பார்த்தும், 'நாய் சேகர்' தலைப்பு கிடைக்காததால் வடிவேலு படக்குழு மற்றொரு தலைப்பை யோசித்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு, 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்கிற பெயர் வைத்துள்ளதாக, ஃபர்ஸ்ட் லுக் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதில் வடிவேலு செம்ம கெத்தாக 5 நாய்களுக்கு நடுவே கோட் சூட்டுடன் அமர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.