'சூரரைப் போற்று' படப்பிடிப்பு தளத்தில் சூர்யா செய்த செயல்! வைரலாகும் புகைப்படங்கள்!
சூர்யா, நடிகர் என்பதை தாண்டி, படிக்கும் குழந்தைகளுக்கு அகரம் என்கிற அறக்கட்டளை ஒன்றை துவங்கி, அதன் மூலம் பல்லாயிர கணக்கான குழந்தைகளை படிக்க வைத்து, அவர்கள், அவர்களுடைய சொந்த காலால் நிற்கும் அளவிற்கான தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறார். அதே போல், சமீப காலமாக... அரசியல் ரீதியாகவும் நிறைய பேசி வருகிறார். இவரின் பேச்சுகளுக்கு ஒரு பக்கம், நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வந்தாலும், தொடர்ந்து சிலர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இவர் தற்போது 'காப்பான்' படத்தை தொடர்ந்து மும்முரமாக நடித்து வரும் திரைப்படம் 'சூரரைப் போற்று'. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் நடிகர் சூர்யாவை பார்க்கும் ஆசையில் பல ரசிகர்கள், குழந்தைகள் என பலர் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் கூடுகிறார்கள். இதில் மாற்றுத்திறனாளி ரசிகர்களும் அடங்குவர். ரசிகர்கள் தன்மீது வைத்துள்ள அன்பை கண்டு நெகிழ்ந்து தினமும் நடிகர் சூர்யா அனைத்து ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார். இது குறித்த சில புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
14

மாற்று திறனாளி ரசிகருடன் சூர்யா
மாற்று திறனாளி ரசிகருடன் சூர்யா
24
ரசிகை கை கொடுக்கும் போது எடுத்தது
ரசிகை கை கொடுக்கும் போது எடுத்தது
34
குழந்தை ரசிகர்களுடன் சூர்யா
குழந்தை ரசிகர்களுடன் சூர்யா
44
நெகிழ வைக்கும் சூர்யா
நெகிழ வைக்கும் சூர்யா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos