- Home
- Cinema
- வாய்ப்பு கொடுத்து வாழ்க்கை கொடுத்தவருக்கே சூர்யா வைத்த செக்! வேறு வழி இல்லாமல் ஓகே சொல்லிவிட்டாரா பாலா?
வாய்ப்பு கொடுத்து வாழ்க்கை கொடுத்தவருக்கே சூர்யா வைத்த செக்! வேறு வழி இல்லாமல் ஓகே சொல்லிவிட்டாரா பாலா?
நடிகர் சூர்யா (Suriya) 20 வருடங்களுக்கு பின் மீண்டும் பாலா (Director Bala) இயக்கத்தில் இணைய உள்ள தகவலை, சூர்யாவே சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்த நிலையில், இந்த படத்திற்காக பாலாவிடம் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில், இயக்குனர் பாலா இயக்கத்தில் அவர் நடித்த நந்தா, பிதாமகன் ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்த படங்களில் வாய்ப்பு கொடுத்து சூர்யாவுக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்றால் அது பாலா தான்.
தொடர்ந்து இந்த இரு படங்களுக்கு பின், கடந்த 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'மாயாவி' படத்தை பாலா தயாரித்திருந்தார். ஆனால் கடந்த 20 வருடங்களாக சூர்யா மற்றும் பாலா கூட்டணி இணையவே இல்லை.
இந்த இரு படங்களுக்கு பின், கடந்த 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான 'மாயாவி' படத்தை பாலா தயாரித்திருந்தார். ஆனால் கடந்த 20 வருடங்களாக சூர்யா மற்றும் பாலா கூட்டணி இணையவே இல்லை.
இந்நிலையில் மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா இணைய உள்ள படம் குறித்த தகவல் சமீபத்தில் அதிகார பூர்வமாக வெளியானது. கடைசியாக விக்ரம் மகன் துருவ்வை வைத்து இயக்கிய திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது.
இந்த படத்தை தொடர்ந்து, பாலா எந்த படத்தையும் இயக்கமால் உள்ளார். இந்த நிலையில் தான் தற்போது... சூர்யாவின் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பையும் கொடுத்து விட்டு தற்போது பாலாவுக்கு செக் ஒன்றையும் வைத்துள்ளாராம் சூர்யா.
அதாவது இந்த படத்தை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாம். இதற்க்கு பாலாவும் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டுள்ளாதாக கூறப்படுகிறது.
பொதுவாக பாலாவின் இதனை படங்கள் இயக்கியதில், இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்ததே இல்லையாம். தனக்கு எப்போது படப்பிடிப்புக்கு வர தோன்றுகிறதோ அப்போது தான் வருவாராம்... ஒரு நாள் முழுக்க ஒரே காட்சியை கூட எடுக்க நேரம் எடுத்து கொள்வாராம். இதனால் போட்ட பட்ஜெட்டை விட, செலவு எகிறிவிடுவதும் உண்டு.
இதையெல்லாம் நன்கு அறிந்து தான் சூர்யா இப்படி ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் சிவா இயக்கத்திலும் நடிக்க உள்ளதும் இந்த ஒப்பந்தத்திற்கான காரணம் என கூறப்படுகிறது.