மங்காத்தா அஜித் போன்று திடீரென சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறிய சூர்யா... வைரலாகும் மாஸ் போட்டோ
Suriya new look : கோவா சென்றுள்ள நடிகர் சூர்யா, விமான நிலையத்தில் தனது மனைவி ஜோதிகாவுடன் எடுத்த போட்டோ வைரல் ஆகி வருகிறது.
நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் என்கிற கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் சூர்யா. இப்படத்தில் அவர் நடித்த காட்சி 5 நிமிடம் மட்டுமே வந்தாலும் மக்கள் மனதில் பதியும்படியான ஒரு கேரக்டராக ரோலெக்ஸ் இருந்தது.
ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து சூர்யாவை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்த நடிகர் கமல்ஹாசன், தான் பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த ரோலெக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த வாட்சின் விலை ரூ.46 லட்சமாம். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
இதையடுத்து, இந்தியில் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகும் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கில் கெஸ்ட் ரோலில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாலா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 41 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் கோவாவில் நடைபெற உள்ளது.
இதற்காக கோவா சென்றுள்ள நடிகர் சூர்யா, விமான நிலையத்தில் தனது மனைவி ஜோதிகாவுடன் எடுத்த போட்டோ வைரல் ஆகி வருகிறது. அந்த போட்டோவில் இருவரும் மாஸ்க் அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளனர். குறிப்பாக அதில் நடிகர் சூர்யா, மங்காத்த பட அஜித் போன்று சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்சி அளிக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... வா...நண்பா, கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கு- நெல்சனுக்காக புது மாப்பிள்ளை விக்னேஷ் சிவன் போட்ட டுவிட் வைரல்