MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோவில்கள் குறித்த சர்ச்சை கிளம்பியதால்...அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்யும் சூரி..

கோவில்கள் குறித்த சர்ச்சை கிளம்பியதால்...அடுத்தடுத்து சாமி தரிசனம் செய்யும் சூரி..

தற்போது சூரி தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Aug 18 2022, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக தரம் உயர்ந்துள்ளார் நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சூரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இதை அடுத்து சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி என முன்னணி கதாநாயகர்களுக்கு நண்பனாக நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்.

இவர் தற்போது விடுதலை என்னும் படத்தில் நாயகனாக நடித்த வருகிறார். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.  நாயகன் ஆவதற்காக தனது உடலை கட்டுடலாக மாற்ற பல கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சூரி. இது குறித்தான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆவது வழக்கம்.

மேலும் செய்திகளுக்கு...ராக்கெட்ரி படத்தால் வீட்டை இழந்த மாதவன்? மேடியின் விளக்கம் இதோ

24
soori

soori

இதற்கிடையே கடந்த சுதந்திர தின விழாவின் போது மாப்பு குச்சிகள் தேசியக் கொடியை கட்டியதாக இவர் மீது பல சர்ச்சைகள் கருத்துக்களும் கிளம்பி இருந்தன. அதோடு  விருமன் பட விழாவில் இவர் பேசியிருந்ததும் பெரிய பூகம்பத்தை கிளப்பியது.

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி ஹிட் அளித்த படம் தான் விருமன். இந்த படத்தை கிராமத்து நாயகர்களின் கதைக்களத்தை இயக்கும் முத்தையா இயக்கி இருந்தார். இதில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் நாயகியாக அறிமுகமானார். இவர்களுடன் ராஜ்கிரண், சூரி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோரும் துணை வேடங்களில் நடித்திருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...வெந்து தணிந்தது காடு டீமுடன் ரஜினி? பரபரப்பை கிளப்பி வரும் தகவல்

34
soori

soori

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மூன்றாம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூரி, சூர்யா, இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சூரி சூர்யாவின் அறக்கட்டளை குறித்து குறிப்பிடுகையில்,  ஆயிரம் கோயில் கட்டுவதை விட, அன்னச்சத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என உணர்ச்சிவசமாக பேசியிருந்தார்.

இந்த கருத்திற்கு பல கண்டங்கள் எழுந்திருந்தன. ஏற்கனவே ஜோதிகா இதுபோன்ற கருத்தை தெரிவித்துவிட்டு ஆன்மிகவாதிகள் மத்தியில்  கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், சூரியும்  இது போன்ற விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...அனிருத் உடன் திரையரங்கு வந்த தனுஷ் ...ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டும் திருச்சிற்றம்பலம்

44
soori

soori

இதைத்தொடர்ந்து மீண்டும் விளக்கம் அளித்த இவர், தான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. நான் எந்த வேலை தொடங்கினாலும் அவரை மீனாட்சி அம்மனை வைத்து தான் ஆரம்பித்து ஆரம்பிப்பேன். நான் கடவுளுக்கு எதிரானவன் கிடையாது. நான் நடத்தும் ஹோட்டலுக்கு அம்மன் என தான் பெயர் வைத்துள்ளேன். சிலர் நான் சொன்னதை தவறாக எடுத்துக் கொண்டனர். என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது . நான் படிக்காதவன் அதனால் கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என்பதால் நான் அவ்வாறு கூறினேன் என சென்னையில் கடந்த எட்டாம் தேதி நடந்த பட விழாவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  தற்போது சூரி தனது குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved