- Home
- Cinema
- வசூல் மன்னனாக மாறியுள்ள சிவகார்திகேயன்.. இதுவரை அவர் கொடுத்த டாப் 3 பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ் என்னென்ன தெரியுமா?
வசூல் மன்னனாக மாறியுள்ள சிவகார்திகேயன்.. இதுவரை அவர் கொடுத்த டாப் 3 பாக்ஸ் ஆபீஸ் ஹிட்ஸ் என்னென்ன தெரியுமா?
சிவகார்த்திகேயன் மெல்ல மெல்ல ஒரு சூப்பர் ஹீரோவாக உருவெடுத்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். சின்னத்திரையில் துவங்கிய தனது பயணத்தை, மிக நேர்த்தியாக வழிநடத்திச் சென்று தற்பொழுது கோலிவுட் உலகின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார். படத்திற்கு தற்பொழுது சுமார் ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் இவர் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.

சூப்பர் ஹீரோவாக உருவெடுக்கும் சிவா தற்போது ஒரு பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் மாறி வருகிறார். ஏற்கனவே வெளியான இவருடைய மாமன்னன் திரைப்படம் வெளியான வெகு சில நாட்களிலேயே 50 கோடி ரூபாய் வசூலை தொட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு பாக்ஸ் ஆப்பில் அதிக கலெக்ஷன் கொடுத்த டாப் 3 திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் பாசில் மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு முதல் முதலாக 50 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 முதல் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் 51 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் டாக்டர். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரபல நடிகை பிரியங்கா மோகன், நடிகர் வினை ராஜ், யோகி பாபு, ரெடன் கிங்ஸ்லி மற்றும் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சுமார் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சிவகார்த்திகேயனுக்கு முதல் 100 கோடி வசூலை கொடுத்த திரைப்படமாக திகழ்ந்து வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் பிரியங்கா மோஹனுடன் இணைந்து நடித்த ஒரு திரைப்படம் தான் டான். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றில் அவருக்கு 100 கோடிக்கு மேல் வசூல் பெற்று தந்த படம் இது.
காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் கேப்டன் மகன் சண்முக பாண்டியனின் புதிய படம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.