- Home
- Cinema
- மூணு சிசேரியன் தாங்கியிருக்காங்க.. என் வலியெல்லாம் ஒன்னுமே இல்ல - மனைவி பற்றி எமோஷனலாக பேசிய SK!
மூணு சிசேரியன் தாங்கியிருக்காங்க.. என் வலியெல்லாம் ஒன்னுமே இல்ல - மனைவி பற்றி எமோஷனலாக பேசிய SK!
Sivakarthikeyan : அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், தனது மனைவி குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.

Sivakarthikeyan
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று, ஸ்டாண்ட்-அப் காமெடியனாக வெற்றி பெற்று, அதன் பிறகு பிரபல தொலைக்காட்சியில், நிகழ்ச்சியை தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகர் தான் சிவகார்த்திகேயன். இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார் அவர், ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த Sivakarthikeyan வெகு சீக்கிரமே கதையின் நாயகனாக மாறினார்.
ரஜினிகாந்த், கமல், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் சாயலில் உள்ள சீரியல் ஹீரோஸ்!
Amaran Movie
ஜாலியான பல திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்த சிவகார்த்திகேயன், கடந்த சில ஆண்டுகளாகவே முற்றிலும் ஆக்ஷன் ஹீரோவாக மாறி இருக்கிறார். தற்பொழுது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் "அமரன்" என்கின்ற திரைப்படத்திற்காக தன்னையே அவர் செதுக்கி இருக்கிறார் என்றே கூறலாம்.
Sivakarthikeyan son
இப்போது 39 வயது நிரம்பிய நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆர்த்தி என்பவரோடு திருமணம் நடந்து முடிந்தது. அவருக்கு ஆராதனா, குகன் மற்றும் பவன் என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், அண்மையில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் தனது மனைவி குறித்து எமோஷனலாக பேசியுள்ளார். "எனக்கு இப்பொழுதும் திரைத்துறையில் பல மன உளைச்சல்கள் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது, உண்மையில் நான் எதிர்கொள்ளும் மன உளைச்சல்களால், எப்போதோ சினிமாவிலிருந்து விலகி விட வேண்டும் என்று நினைத்தேன்".
Aarthi
"ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்து, உனக்கு பிடித்ததை நீ செய், நிச்சயம் வெற்றி பெறுவாய் என்று என்னை ஒவ்வொரு முறையும் ஊக்குவிப்பது எனது மனைவி தான். எங்களுக்கு மூன்று குழந்தைகள், மூன்று பேருமே சிசேரியன் முறையில் பிறந்தவர்கள் தான். இருப்பினும் அந்த வலியை தாங்கிக் கொண்டு, குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, என்னையும் கவனித்து வருகிறார் என்னுடைய மனைவி. என் வெற்றியின் ரகசியமே அவர் தான் என்றார் அவர்..
மாரிசெல்வராஜ் என்னை பளார்னு அறைஞ்சாரு.. பேட்டியில் ஓப்பனாக பேசிய பரியேறும் பெருமாள் பட நடிகர்!