கலெக்ஷனின் மாஸ் காட்டும் சிம்புவின் 'பத்து தல'... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸை மிஞ்சிய இரண்டாவது நாள் வசூல்!
நடிகர் சிம்பு நடிப்பில், மார்ச் 30 ஆம் தேதி வெளியான 'பத்து தல' படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு இதுவரை நடித்திராத, மிகவும் மெச்சூர்டான... கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. கன்னடத்தில் வெளியான, முஃட்டி படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த படம், சிம்பு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.
இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணா இயக்கி இருந்த இப்படத்தை, ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால், சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து, 'மாநாடு' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களில் நடித்தார்.
சிம்பு, குண்டாக இருக்கும் போது... 'பத்து தல' படத்தில் ஒப்புக்கொண்டதால், உடல் எடையை குறைத்த பின்னர் அந்த கதாபாத்திரத்திற்கு செட் ஆகவில்லை. எனவே மீண்டும் சுமார் 108 கிலோ வரை எடையை கூட்டி, இப்படத்தில் நடித்து முடிந்த பின்னர், மீண்டும் உடல் எடையை குறைத்தார். இது குறித்து அவரே 'பத்து தல' ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவித்திருந்தார்.
படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை, பெற்று வருகிறது இப்படம். மேலும் இதுவரை காட்டிராத மாஸ் கெட்டப்பில் சிம்புவை காட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
முதல் நாளே, சிம்புவின் 'பத்து தல' படம் தமிழகத்தில் மட்டும் 7 கோடி வசூலித்ததாகவும், ஒட்டு மொத்தமாக 12.3 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்த நிலையில், தற்போது இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இரண்டாவது நாளில், இப்படம்... முதல் நாள் வசூலை மிஞ்சும் வகையில்.. சுமார் 17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே சிம்புவின் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து, இப்படமும் 100 கோடி கிளப்பில் இணையுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிர்ச்சி... இன்ஸ்டா பிரபலம் 'குயின் ஆப் ரீல்ஸ்' என அழைக்காடும் 9 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!