MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அட்ராசக்க... தீவிரம் காட்டும் பாலா! அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது!

அட்ராசக்க... தீவிரம் காட்டும் பாலா! அருண் விஜய் நடிக்கும் ‘வணங்கான்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியானது!

இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும், 'வணங்கான்' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 31 2023, 10:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் பாலா  முதலில், நடிகர் சூர்யாவை வைத்து எடுக்க திட்டமிட்டிருந்த திரைப்படம் தான் 'வணங்கான்'. இப்படத்தை நடிகர் சூர்யாவே, தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்க இருந்தார். ஆனால் பாலா இஷ்டத்துக்கு காசை செலவு செய்து வருவதாகவும், இன்னும் ஒரு சில பிரச்சனைகள் தலை தூக்கியதாலும், இப்படத்தில் இருந்து நாசுக்காக வெளியேறினார் சூர்யா. மேலும் இயக்குனர் பாலா மற்றும் சூர்யா தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

அந்த அறிக்கையில் இயக்குனர் பாலா, மீண்டும் இதே கதையில் புதிய ஹீரோ ஒருவரை வைத்து எடுக்க உள்ளதாக தெரிவித்த நிலையில், மீண்டும் இப்படம் தூசு கட்டப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் தற்போது அருண் விஜய் நடித்து வருகிறார். சமீபத்தில் அருண் விஜயின் வணங்கான் கெட்டப் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி படு வைரலாக பார்க்கப்பட்டது.

'கடைசி விவசாயி' படத்திற்கு பின்னர் மீண்டும் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி!
 

34

இந்நிலையில் இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது. மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது.

44

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ​​ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர்கள் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து... பாடகர் விஜய் ஜேசுதாசின் வீட்டில் நகை திருட்டு! பரபரப்பு புகார்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
அருண் விஜய்
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved