- Home
- Cinema
- Shah Rukh khan :‘மாஸ்டர்’ விஜய் பாணியில் ரசிகர்களுடன் மாஸாக செல்பி எடுத்த ஷாருக்கான் - வைரலாகும் புகைப்படங்கள்
Shah Rukh khan :‘மாஸ்டர்’ விஜய் பாணியில் ரசிகர்களுடன் மாஸாக செல்பி எடுத்த ஷாருக்கான் - வைரலாகும் புகைப்படங்கள்
Shah Rukh khan selfie : நேற்று ரமலான் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் அவருக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கோஷமிட்டனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஜீரோ. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன்பின்னர் 4 ஆண்டுகள் ஆகியும் அவர் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. தற்போது நடிகர் ஷாருக்கான் கைவசம் பதான் திரைப்படமும், டங்கி என்கிற திரைப்படமும் உள்ளது.
இதுதவிர அட்லீ இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் ஷாருக்கான். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷுட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று ரமலான் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் அவருக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து கோஷமிட்டனர்.
இதையடுத்து வீட்டின் மாடிக்கு சென்ற ஷாருக்கான் அங்குள்ள பால்கனியில் இருந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். கூட்டத்தை பார்த்து பிரம்மித்துப்போன ஷாருக்கான் அவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். அந்த செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த தமிழ் ரசிகர்கள் இது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற போது நடிகர் விஜய் வேன் ஒன்றின் மீது ஏறி எடுத்த செல்பி புகைப்படத்தைப் போன்று இருப்பதாக ஒப்பிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Suriya 41 : படப்பிடிப்பில் நடிகர் சூர்யா - பாலா இடையே மோதலா?... தீயாய் பரவும் தகவல் - பின்னணி என்ன?