நடிகர் செந்திலுக்கு கொரோனா பாதிப்பு..! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
தற்போது தமிழகத்தில் மின்னல் வேகத்தில், பரவி வருகிறது கொரோனா. இந்நிலையில் 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்த செந்தில், கொரோனா தொற்றால் பாதிக்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 6,711 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,40,145ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் நேற்று மட்டும் 2,105 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,181ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனாவை கட்டு படுத்த விரைவில் முழு ஊரடங்கு போடப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான செந்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காமெடி நடிகர் செந்தில், கவுண்டமணியுடன் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்த பின்னர், அவர் தன்னை அதிமுக கட்சியில் இணைத்துக் கொண்டு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர், அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்தபோது, அதிமுகவில் இருந்து விலகி அமமுக-வில் இணைத்துக் இணைந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அமமுக கட்சியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்த நடிகர் செந்தில், தற்போது அதிமுகவில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்துள்ளார். எனவே இவர் பாஜக கட்சிக்கு ஆதரவாக சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.
தற்போது இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர் எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, ரசிகர்கள், பாஜகவினர், மற்றும் திரையுலகை சேர்ந்த பலர் இவர் விரைவில் குணமடைய வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.