சின்னத்திரைக்கு வந்த நடிகர் சத்யராஜ்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகர் சத்யராஜை சின்னத்திரையில் சீரியலில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விரைவில் இந்த எபிசோட் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

sathyaraj
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி சூப்பர் ஹிட் நாயகனானவர் சத்யராஜ் . ஒரு 80, 90களில் உச்ச நாயகனாக கொடிகட்டி பறந்தார். தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார். பின்னர் தனது பாதையை திருப்பிய இவர் எந்த கதாபாத்திரமானாலும் ஏற்று நடிக்க ஆரம்பித்து விட்டார். குணச்சித்திர கதாபாத்திரம், துணை கதாபாத்திரம், காமெடி, ஆக்சன் என ஒவ்வொரு துறையிலும், தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழை தொடர்ந்து டோலிவுட்டுக்கு பறந்த இவர் உலக புகழ் பெற்ற ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுவிட்டார்.
sathyaraj
தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த சத்யராஜ், தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள வீட்டுல விஷேசம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
VITTULA VISHESHAM
எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் படங்களை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்துள்ள வீட்டுல விஷேசம் படத்தின் பிரமோஷன்விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் டிவியின் நிகழ்ச்சியிலும் ஆர்ஜே பாலாஜி மற்றும் அபர்ணா கலந்து கொண்டனர். இதனிடையே தொடர்ந்து நிகழ்ச்சிகள், பேட்டிகளை தாண்டி மற்றொரு வித்தியாசமான முயற்சியிலும் படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
VITTULA VISHESHAM
அதன்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் வீட்ல விஷேசம் படக்குழுவினர் நடித்துள்ளார்கள். இதன்மூலம் நடிகர் சத்யராஜும் சீரியலில் நடித்துவிட்டார்.இவரை சின்னத்திரையில் சீரியலில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். விரைவில் இந்த எபிசோட் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது படத்திற்கு சிறப்பான பிரமோஷனை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.