10 ஆண்டுகள் கழித்து பெற்றெடுத்த தேவதைக்கு வித்தியாசமான பெயர் சூட்டிய ராம் சரண் - உபாசனா ஜோடி!
குளோபல் ஸ்டார் ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோர் தங்களுடைய குட்டி தேவதைக்கு சூட்டியுள்ள பெயரை, அதிகாரப்பூர்வமாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னாடி நடிகராக இருக்கும் ராம் சரணுக்கு, RRR படத்தின் வெற்றி உலக அளவில் ரசிகர்களை பெற்றுத்தந்தது. இவருக்கும், உபாசனாவிற்கும் திருமணம் ஆகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உபாசனா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிவித்தார் ராம் சரண். மேலும் உபாசனாவின் வளையக்காப்பு புகைப்படங்கள் முதல்கொண்டு சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ஜூன் 20ஆம் தேதி, ராம்சரண் - உபாசனா ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பல வருடங்களுக்கு பின்னர் பெற்றோர் ஆன சந்தோஷத்தை ராம் சரணும், தாத்தாவான சந்தோஷத்தை சிரஞ்சீவியும் கொண்டாடினார்கள்.
உள்ளாடை அணியாமல்... கையில் முகமூடியோடு கவர்ச்சி உடையில் ஜான்வி கபூர்!
மேலும் ரசிகர்களுடனும் இந்த சந்தோஷத்தை பரிமாறி கொண்டனர். ராம் சரண் ஷூட்டிங் பணிகளை ஓரம் கட்டி வைத்துவிட்டு, தன்னுடைய மகளை கவனித்து வருவதாகவும் தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியானது.
உபாசனா ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கடந்த 23ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்லும்போது, செய்தியாளர்களிடம் பேசிய ராம்சரண் குழந்தையின் பெயரை நானும் உபாசனாகவும் சேர்ந்து முடிவு செய்துள்ளோம் விரைவில் இதுகுறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்தனர்.
அதன்படி சற்று முன்னர், ராம்சரண் - உபாசனா ஜோடி, தங்களின் குழந்தையின் தொட்டில் போடும் விழாவை நிறைவு செய்த பின்னர், குழந்தைக்கு க்ளின் காரா கோனிடேலா என வித்தியாசமாக, வைத்துள்ள பெயரை அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ராம் சரணுக்கும் அவரின் மனைவிக்கும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.