- Home
- Cinema
- Rajinikanth: கருகரு முடியுடன் ஸ்டைலிஷாக நிற்கும் தலைவர்... மாடர்ன் உடையில் லதா ரஜினிகாந்த்..! அரிய புகைப்படம்!
Rajinikanth: கருகரு முடியுடன் ஸ்டைலிஷாக நிற்கும் தலைவர்... மாடர்ன் உடையில் லதா ரஜினிகாந்த்..! அரிய புகைப்படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super star Rajinikanth)அவரது இளமை காலத்தில், மனைவி லதா ரஜினிகாந்துடன் (Latha Rajinikanth) எடுத்து கொண்ட அரிய புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கோலிவுட் திரையுலகில் 70 வயதை கடந்து விட்டாலும், அன்றும், இன்றும், என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் புகழப்படுபவர் ரஜினிகாந்த்.
ஒரு குணச்சித்திர நடிகராக அறிமுகம் ஆகி, வில்லன், ஹீரோ என தன்னை தானே செதுக்கி கொண்டவர். தன்னுடைய முழு முயற்சியால் இவருக்கு இப்படி பட்ட வெற்றி கிடைத்தது என்றால் அது மிகையல்ல.
இவர் கடந்த 1881 ஆம் ஆண்டு, லதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தன்னுடைய வாழ்க்கையிலும், திரையுலகிலும் ஒரு உச்ச நட்சத்திரமாக இருக்க... முக்கிய காரணம் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்.
இவர்களுடைய காதல் கதையும் மிகவும் வித்தியாசமானது... தில்லு முல்லு பட ஷூட்டிங்கி லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால் மல்லேஸ்வரம் பகுதியில் வசித்து வந்தார். சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா கல்லூரி பத்திரிக்கைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோது தான் அவரை முதன் முதலாக சந்தித்தார் ரஜினிகாந்த்.
இந்த முதல் சந்திப்பிலேயே லதாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு... திரில்லாக காதலை கூறி அதிரவைத்தார் ரஜினிகாந்த. அந்த சந்திப்பிற்கு பிறகு உருவான காதல் திருமணத்திலும் முடிந்தது.
தற்போது வரை, மிகவும் அன்பான தம்பதியாக இருக்கும் இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர். இருவருமே திரையுலகிலும் மிகவும் பிரபலம்.
இது ஒருபுறம் இருக்க, ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்து கொண்ட அரிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதில் தலைவர்... செம்ம ஸ்டைலிஷாக கருகரு முடியுடன் ரசிகர்களை கவர்த்திழுக்கிறார். அதே போல் எப்போதும் சேலையில் மட்டுமே அதிகம் பார்க்கப்பட்ட லதா ரஜினிகாந்த் மாடர்ன் உடையில் இருக்கிறார். இவர்களுடன் பெண் ஒருவரும் போஸ் கொடுக்கிறார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.