46 வயதில் அப்பா ஆனார் நடிகர் பிரேம்ஜி... குவியும் வாழ்த்துக்கள்..!
தமிழ் திரையுலகில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமையாளராக வலம் வந்த நடிகர் பிரேம்ஜி கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு அவரது மனைவி இந்துவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

Premgi Amaren Becomes Father
கோலிவுட்டில் பன்முகத்திறமை கொண்டவராக இருந்தவர் கங்கை அமரன். இவருக்கு வெங்கட் பிரபு, பிரேம்ஜி என இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் வெங்கட் பிரபு முதலில் நடிகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தார். பின்னர் சென்னை 28 படம் மூலம் இயக்குனரான பிரேம்ஜி முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். அதன்பின்னர் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி டாப் இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறது.
கங்கை அமரன் மகன் பிரேம்ஜி
கங்கை அமரனின் இரண்டாவது மகனான பிரேம்ஜி, சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதில் பெரியளவில் சோபிக்க முடியாததால், நடிகராக அவதாரம் எடுத்தார். வெங்கட் பிரபு படங்களில் இவரின் காமெடி காட்சிகள் கிளிக் ஆனதால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகராக மட்டுமின்றி பாடகராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ள பிரேம்ஜி, ஒருசில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
45 வயதில் திருமணம் செய்த பிரேம்ஜி
45 வயது வரை திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் ஆனது. இவர் இந்து என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இவர்களது திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் வைத்து நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பு வரை நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று மது அருந்துவது என ஜாலியாக இருந்து வந்த பிரேம்ஜி, திருமணத்துக்கு பின்னர் ஆளே டோட்டலாக மாறிப்போனார். மனைவியுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுவது என குடும்பஸ்தனாக மாறிப்போனார்.
அப்பா ஆன குஷியில் பிரேம்ஜி
இந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரேம்ஜியின் மனைவி கர்ப்பமானார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனைவியின் வளைகாப்பு பங்க்ஷனை கிராண்ட் ஆக நடத்தி இருந்தார் பிரேம்ஜி. இந்த நிலையில், இன்று பிரேம்ஜி - இந்து தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். 46 வயதில் முதல் குழந்தைக்கு அப்பா ஆன பிரேம்ஜிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

