MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 120 சர்வதேச விருதுகள் பெற்றாலும்... தேசிய விருது கிடைத்தது தான் பெருமை! நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி!

120 சர்வதேச விருதுகள் பெற்றாலும்... தேசிய விருது கிடைத்தது தான் பெருமை! நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி!

நடிகர் பார்த்திபன் இயக்கி - நடித்திருந்த இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற மாயாவா தூயவா பாடலுக்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில், இதற்க்கு பார்த்திபன் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 24 2023, 10:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

69வது தேசிய விருது இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் ரசிகர்கள் பலர் தேசிய விருது கிடைக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஜெய்பீம், கர்ணன், போன்ற படங்களுக்கு ஒரு விருது கூட கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றம் என்றாலும், கடைசி விவசாயி படத்திற்கு இரண்டு தேசிய விருதும், இரவின் நிழல் படத்திற்கு ஒரு தேசிய விருதும் கிடைத்தது சற்று ஆறுதல் என்றே கூறலாம். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்நிலையில் நடிகர் பார்த்திபன், இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற 'மாயாவா தூயவா' பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நன்றி தெரிவிக்கும் விதமாக நெகிழ்ச்சியுடன் பேசியலாளர். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது...

சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற முதல் நடிகர் அல்லு அர்ஜுன் தானாம்! கொண்டாடும் தெலுங்கு திரையுலகம்!
 

35

 "வணக்கம் நான் பார்த்திபன் மகிழ்வுடன், நிலவில் சந்திரயான் இறங்கும் போது  விஞ்ஞானிகள் மட்டும் அல்ல, அந்த கட்டிடத்தில் பணிபுரியும் அனைவருமே, மகிழ்ந்திருப்பார்கள். பெருமை பட்டிருப்பார்கள். அப்படி பெருமைக்குரிய தேசிய விருது, 'இரவின் நிழல்' படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய மாயாவா தூயவா என்கிற பாடலுக்கு அறிவிக்கப்பட்ட போது, இதற்க்கு முழு முதல் காரணமான ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றி.
 

45

இஸ்ரோவில் பணிபுரிந்த நிறைய ஊழியர்களில் ஒருவன் போல, அந்த படத்திற்காக உழைத்த ஊழியர்களில் ஒருவனாக, நானும் மகிழ்கிறேன்... பெருமை கொள்கிறேன். ஏ.ஆர்.ரகுமானுடன் ஒரு படமாவது பண்ண வேண்டும் என்பது என்னுடைய நீண்ட காத்திருப்பு, அதன் பலனாக எனக்கு 'இரவின் நிழலில்' கிடைத்த மரியாதை கிட்ட தட்ட 120 சர்வதேச விருதுகள் எல்லாமே கிடைத்தும் கூட , நம் தேசிய விருது என்கிற போது அதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா! இன்ஸ்டா பதிவால் எழுந்த சந்தேகம்.. வைரலாகும் புகைப்படம்!
 

55

அதில் என்னுடைய படத்தின் பெயர் இருப்பது மகிழ்ச்சி. அதில் என் பெயர் இருப்பதும் மகிழ்ச்சி. இதற்க்கு காரணமான ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும், ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கும் இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றி என தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஷ்ரேயா கோஷல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Parimala And Co Movie Day 1 Box Office : பரிமளா அண்ட் கோ முதல் நாளில் வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஜனனியை கடத்தும் கும்பல்... சக்தியிடம் ஆதாரத்தை கேட்கும் ஈஸ்வரி
Recommended image3
Peddi Day 2 Box Office Collection: 2ம் நாளே வசூலில் வாஷ் அவுட் ஆன பெத்தி... அதுக்குன்னு இவ்வளவு கம்மியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved