MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • செந்தமிழில் அழைப்பு விடுத்த ஆதித்த கரிகாலன்.. இங்கிலீஸில் ரிப்ளை செய்த வந்தியத்தேவன் - டுவிட்டரில் ஒரே கலாட்டா

செந்தமிழில் அழைப்பு விடுத்த ஆதித்த கரிகாலன்.. இங்கிலீஸில் ரிப்ளை செய்த வந்தியத்தேவன் - டுவிட்டரில் ஒரே கலாட்டா

ponniyin selvan : பொன்னியின் செல்வன் புரமோஷனுக்காக புதுவிதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர். 

1 Min read
Author : Ganesh A
Published : Sep 14 2022, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12

பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு இன்னும் இரு வாரங்களே உள்ளதால், இப்படத்தின் புரமோஷன் பணிகளும் வேகமெடுக்கத் தொடங்கி உள்ளன. அதன்படி தஞ்சையில் உள்ள பெரிய கோவிலில் இருந்து புரமோஷனை தொடங்க உள்ளார்களாம்.

இதற்கு அழைப்பு விடுக்கும் விதமாக, ஆதித்த கரிகாலனாக மாறி நடிகர் விக்ரம் போட்ட டுவிட்டில், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டுத்திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா என பதிவிட்டு கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி ஆகியோரை டேக் செய்திருந்தார் விக்ரம்.

இதையும் படியுங்கள்... Viral Video: இவரை சந்திக்க வேண்டும்.. ஆனால் எப்படி..? கியூட் பேபியின் வீடியோ வெளியிட்டு உருகும் ராஷ்மிகா!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22

இதற்கு வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி அளித்துள்ள ரிப்ளை தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில், “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me” என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்ன வந்தியத்தேவன் இங்கிலீஸெல்லாம் பேசுராரு என கிண்டலடித்து வருகின்றனர்.

இவ்வாறு பொன்னியின் செல்வன் புரமோஷனுக்காக புதுவிதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர். முன்னதாக நடிகை திரிஷா தனது பெயரை டுவிட்டரில் குந்தவை என்றும், நடிகர் விக்ரம் தனது பெயரை ஆதித்த கரிகாலன் என்றும் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகர்கள் மத்தியில் நம்ம ஊரை விட்டுக்கொடுப்பதா? கடுப்பான சென்னை வாசிகள் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் ராஜு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்தி (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja : நீச்சல் குளத்தில் மெலடி பாடலா? இளையராஜாவின் பிடிவாதத்தால் மணிரத்னம் படத்தில் உருவான அடிபொலி ஹிட் சாங்!
Recommended image2
DC புயலில் சிக்கி வசூலில் வாஷ் அவுட் ஆன GDN! படம் சூப்பர்... ஆனா வசூல் இவ்வளவு சுமாரா?
Recommended image3
DC Movie Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாறிய லோகேஷ்... முதல் நாளே இத்தனை கோடி வசூல் அள்ளியதா டிசி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved