MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karan : ஆன்ட்டியால் அழிந்தாரா விஜய்யின் ஜிகிரி தோஸ்து? சினிமாவை விட்டு விலகிய கரண் இப்போ எங்கு இருக்கிறார்?

Karan : ஆன்ட்டியால் அழிந்தாரா விஜய்யின் ஜிகிரி தோஸ்து? சினிமாவை விட்டு விலகிய கரண் இப்போ எங்கு இருக்கிறார்?

Karan’s Untold Story தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் கரண். அவர் தற்போது எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 07 2026, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
The Rise and Fall of Actor Karan
Image Credit : facebook/Karanoffl

The Rise and Fall of Actor Karan

தமிழ் திரையுலகில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகர் கரண். குழந்தை நட்சத்திரமாக தொடங்கிய அவரது பயணம், பின்னர் குணச்சித்திர நடிகர், வில்லன் மற்றும் ஹீரோ என பல பரிமாணங்களில் வளர்ந்தது குறிப்பிடத்தக்கது. சிறுவயதிலேயே மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கரண், பின்னர் எங்க பாட்டன் சொத்து உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்தார். ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
கரணின் திரைப்பயணம்
Image Credit : facebook/Karanoffl

கரணின் திரைப்பயணம்

கரணுக்கு பெரிய திருப்பமாக அமைந்த படம் நம்மவர். கமல்ஹாசன் நடித்த இந்த திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த கரண், தனது நடிப்பால் தனி அடையாளம் பெற்றார். அதேபோல் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்த காட்சிகளும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. 2000களில், முன்னணி நடிகர்களான விஜய், அஜித் மற்றும் பிரசாந்த் ஆகியோரின் நண்பனாக நடித்தது கரணின் சினிமா பயணத்தில் முக்கிய இடம் பிடித்தது. லவ் டுடே, கண்ணெதிரே தோன்றினால் மற்றும் உன்னைத் தேடி போன்ற படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

Related Articles

Related image1
Now Playing
ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி
Related image2
Now Playing
Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
34
அஜித், விஜய்யின் ஜிகிரி தோஸ்து
Image Credit : X

அஜித், விஜய்யின் ஜிகிரி தோஸ்து

அந்த காலத்தில் ரஜினி, கமலுக்கு சரத்பாபு இருந்தது போல, அஜித் மற்றும் விஜய்க்கு ஜிகிரி தோஸ்து கதாபாத்திரம் என்றால் கரண் என்ற நிலை உருவானது. இதன் பின்னர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூல் அளவில் அவரது ஹீரோ படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. திரையுலகில் ஆரம்ப காலங்களில் சம்பள பிரச்சனைகள் மற்றும் தயாரிப்பாளர்களால் ஏற்பட்ட ஏமாற்றங்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் தனது சம்பள விஷயங்களில் மிகவும் கவனமாக நடந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின.

44
காணாமல் போன கரண்
Image Credit : facebook/Karanoffl

காணாமல் போன கரண்

மேலும், கரணின் திரைப்பயணத்தில் அவருடன் இருந்த பெண் மேனேஜர் குறித்து அக்காலத்தில் பல கிசுகிசுக்கள் பரவின. அவரது சினிமா வாய்ப்புகள் குறைந்ததற்கும் அந்த மேனேஜர் காரணம் என்ற தகவல்கள் வெளியாகினாலும், அவை உறுதிப்படுத்தப்படாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் ரசிகர் மன்றங்கள் மூலம் சமூக சேவைகளிலும் ஈடுபட்ட கரண், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார் என கூறப்படுகிறது. அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் வில்லன் அல்லது குணச்சித்திர வேடங்களில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trisha : காதல் எப்போதும்... விஜய் முதல்வர் ஆன பின் த்ரிஷா போட்ட சூசக பதிவு - வைரலாக்கும் நெட்டிசன்கள்
Recommended image2
Karuppu முதல் Exam வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் செம மாஸாக ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Related Stories
Recommended image1
Now Playing
ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி
Recommended image2
Now Playing
Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved