குறும்பா என் உலகே நீதான்டா... மகனின் பிறந்தநாளை பேமிலியோடு பார்ட்டி வைத்து கொண்டாடிய ஜெயம் ரவி - போட்டோஸ் இதோ
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மகன் ஆரவ்வின் பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற எடிட்டராக வலம் வந்தவர் மோகன். அவர் தன்னுடைய மகன் ரவியை ஜெயம் படம் மூலம் நாயகனாக அறிமுகமாக்கினார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை பதிவு செய்ததால் அப்படத்தின் பெயரை தன்னுடைய பெயருடன் சேர்த்துக் கொண்டு ஜெயம் ரவி என வைத்துக்கொண்டார். சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வரும் ஜெயம் ரவி பெரும்பாலும் வெற்றிப்படங்களை தான் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கூட சக்கைப் போடு போட்டது. மணிரத்னம் இயக்கிய இந்த பிரம்மாண்ட படைப்பில் நடிகர் ஜெயம் ரவி தான் பொன்னியின் செல்வனாக நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியை பெற்றதால், ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் அடுத்ததாக இறைவன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... நயன்தாரா - ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அஹமத் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர சைரன் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து வரும் ஜெயம் ரவி, எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரியங்கா மோகன் உடன் ஒரு பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகின்றார். இதுதவிர மிஷ்கினின் உதவி இயக்குனர் இயக்க உள்ள ஜீனி என்கிற பிரம்மாண்ட பட்ஜெட் படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மகன் ஆரவ்வின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் பார்ட்டி வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரவ்வின் 13-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஜெயம் ரவியின் தாய், தந்தை மற்றும் அவரது அண்ணன் மோகன் ராஜா உள்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். ஆரவ் நடிகர் ஜெயம் ரவி உடன் டிக் டிக் டிக் என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பூஜையுடன் ஆரம்பமானது மஞ்சள் வீரன்... முதல் படத்திலேயே டிடிஎப் வாசனுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்?