தேர்தலுக்கு பின் முதன்முறையாக ரோஜா குறித்து பேசிய பவன் கல்யாண் ஆதரவாளர்..
பவன் கல்யாணின் ஆதரவாளராக இருந்து வரும் ஹைபர் ஆதி, தேர்தலுக்கு பின் ரோஜா குறித்து முதன்முறையாக பேசி உள்ளார்.
Hyper Aadi
பிரபல தெலுங்கு நடிகரும் தொகுப்பாளருமான ஹைபர் ஆதி தனது பஞ்ச் டயலாக் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். திரைப்பட விழாக்கள் மற்றும் அரசியல் தளங்களில் தனது கருத்துகளை தைரியமாக தெரிவிப்பதால் அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
Hyper Aadi
பிரபல தெலுங்கு நடிகரும் தொகுப்பாளருமான ஹைபர் ஆதி தனது பஞ்ச் டயலாக் மூலம் அரசிகர்களை கவர்ந்து வருகிறார். திரைப்பட விழாக்கள் மற்றும் அரசியல் தளங்களில் தனது கருத்துகளை தைரியமாக தெரிவிப்பதால் அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.
Hyper Aadi
நடிகர் பவன் கல்யாணின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஹைபர் ஆதி, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அவருக்காக தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு கட்சியில் ஏதேனும் பதவி வழங்கப்படும் எதிர்பார்த்த நிலையில் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. ஆனால் தான் பவனுக்காக உழைத்ததாகவும், பதவிக்காக உழைக்கவில்லை என்றும் ஆதி கூறினார்.
Hyper Aadi
ரோஜா பற்றி உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி ஆதியிடம் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஆதி, ரோஜாவுக்கு அவரை (ஜெகன்) பிடிக்கும். எனக்கு பவன் பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்கும். ஆனால் ஜபர்தஸ்த் நிகழ்ச்சியின் நடுவராக ரோஜா இருந்தார். அதனால் அவர் எப்போதும் மரியாதை இருக்கும். பல கலைஞர்கள் உருவாக அவர் காரணமாக இருக்கிறார். அதனால் அவர் மீது மரியாதை இருக்கும்” என்று தெரிவித்தார்.
Hyper Aadi
எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹைபர் ஆதி “ ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துவிட்டதாகவும், யூடியூப்பில் பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்வதாகவும் கூறினார். எனவே சில வருடங்கள் இதையே தொடரலாம் என்று நினைக்கிறேன். நிஜ வாழ்க்கையில் திருமணத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது. ” என்று கூறினார்.