MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹரிஷ் கல்யாணின் காதலி என்ன செய்கிறார்?... இருவருக்கும் திருமணம் எப்போது? - லீக்கான தகவல் இதோ

ஹரிஷ் கல்யாணின் காதலி என்ன செய்கிறார்?... இருவருக்கும் திருமணம் எப்போது? - லீக்கான தகவல் இதோ

Harish Kalyan : நடிகர் ஹரிஷ் கல்யாண், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறி தனது காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 06 2022, 08:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். அந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்ற இவர், குறுகிய நாட்களிலேயே ரசிகர்கள் மனதை வென்று இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்தினார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அந்த வகையில், பியார் பிரேமா காதல், தாராள பிரபு, கசடதபற, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஓமணப்பெண்ணே என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த ஹரிஷ் கல்யாண் நேற்று, தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணின் கையை பிடித்தவாரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் ஏதேனும் படத்தின் புரமோஷனுக்காக இவ்வாறு பதிவிட்டு உள்ளதாக கமெண்ட் செய்து வந்தனர். ஏனெனில் இதற்கு முன்னர் அவர் நடித்த ஓ மணப்பெண்ணே படம் ரிலீசாகும் முன் நடிகை பிரியா பவானி சங்கர் உடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ஹார்டின் எமோஜியை போட்டிருந்தார். அந்த சமயத்தில் இருவரும் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அது படத்துக்கான புரமோஷன் என பின்னர் அறிவித்தார்.

இதையும் படியுங்கள்... விரைவில் திருமணம்... காதலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் ஹரீஷ் கல்யாண்! வைரலாகும் புகைப்படம்!

34

தற்போதும் அதேபோல் தான் இருக்கும் என எண்ணி வந்த நெட்டிசன்களுக்கு, தான் உண்மையிலேயே திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறி தனது காதலியின் புகைப்படத்தையும் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஹரிஷ் கல்யாண். அவர் பெயர் நர்மதா உதயகுமார் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஹரிஷ், அவர் என்ன செய்கிறார், திருமணம் எப்போது என்கிற தகவலை வெளியிடவில்லை.

44

இந்நிலையில், அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஹரிஷ் கல்யாணின் காதலி நர்மதா, ஐடி கம்பெனியின் பணியாற்றி வருவதாகவும், இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் வருகிற அக்டோபர் 28-ந் தேதி நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதையும் படியுங்கள்... ஹீரோயின்களை மிஞ்சும் அழகு! மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து திருமணம் குறித்து பகிர்ந்து கொண்ட ஹரீஷ் கல்யாண்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Suriya Politics: அரசியலுக்கு வர்றேனா? சூர்யா வைத்த முற்றுப்புள்ளி! ரசிகர்களுக்கு ஷாக்
Recommended image2
கட்டா குஸ்தி 2 முதல் பாக்யராஜின் டார்க் வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள்
Recommended image3
Pandian Stores 2 : குமாருக்கு அரசியை பெண்கேட்டு சென்ற காந்திமதி... பாண்டியன் ஃபேமிலி கொடுத்த ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved