லிஸ்ட்ல இன்னும் எத்தனை படம் இருக்குனு தெரியல..? மாஸ் காட்டும் தனுஷ் - மீண்டும் இணையும் அருண் மாதேஸ்வரன்!
பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் அருண் மாதேஷ், மீண்டும் ஒரு திரைப்படத்தில் தனுஷுடன் உடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த 2023ம் ஆண்டு வெங்கி என்பவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வாத்தி, இந்த திரைப்படம் உலக அளவில் பிப்ரவரி மாதம் 1ம் தேதி வெளியான நிலையில் அடுத்தபடியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளது.
கேப்டன் மில்லர் திரைப்பட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், தனுஷ் அவர்கள் தானே இயக்கி நடிக்கும் அவருடைய ஐம்பதாவது திரைப்பட பணிகள் தற்பொழுது முழு வீச்சில் நடந்து வருகிறது. பா பாண்டி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் இயக்குனராக களமிறங்கும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு திரைப்படங்கள் முடிவடைந்த பிறகு, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் சேகர் கமுல்லா இயக்க உள்ள ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் ஆகி உள்ளார் நடிகர் தனுஷ். தனது 50வது பட பணிகள் முடிவடைந்த பிறகு இந்த திரைப்படத்தில் அவர் நடிக்க இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு மீண்டும் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தனுஷ், Tere Ishk Mein என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார், இந்த திரைப்படம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
ஏற்கனவே இத்தனை படங்களை தனது லிஸ்டில் வைத்துள்ள நடிகர் தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான wunder bar தயாரிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒருமுறை நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதேபோல மாரி செல்வராஜ் இயக்கத்திலும் அவர் ஒரு திரைப்படத்தை Wunder Bar தயாரிப்பில் ஹச். வினோத், நெல்சன் திலிப் குமார், வெற்றிமாறன் உள்ளிட்ட பல இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.