2 மாதம் வீட்டுக்கே போகாத தனுஷ்! அமலா பால் அப்பார்ட்மென்டுக்கு சென்று எச்சரித்த ரஜினி! பிரபலம் பகிர்ந்த தகவல்!
நடிகர் தனுஷ் இரண்டு மாதங்களுக்கு மேல், வீட்டுக்கே வராததால்... நடிகை அமலா பால் தங்கி இருந்த அப்பார்ட்மெண்டுக்குகே சென்று ரஜினிகாந்த் அவரை எச்சரித்ததாக செய்திகள் வெளியானது என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ள தகவல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, மாடலிங் செய்து கொண்டிருந்த அமலா பால் மலையாளத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், தமிழில் நடிக்க ஆர்வம் காட்டினார். அப்படி வாய்ப்பு தேடி அலைந்த சமயத்தில், அமலா பாலுக்கு 'வீர சேகரன்' என்கிற படத்தில், கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், இதைத்தொடர்ந்து 'சிந்து சமவெளி' படத்தில் நடிக்க கமிட் ஆனார். ஆரம்பத்திலேயே இப்படத்தில் நடிக்க அமலாபால் தயங்கிய நிலையில், இயக்குனர் சாமி அவரை சம்மதிக்க வைத்து படத்தில் நடிக்க வைத்தார். எனினும் இந்த படத்தின் பாதியிலேயே அமலா பால், நடிக்க முடியாது என முரண்டு பிடிக்க, படத்தை முடித்து கொடுக்கவில்லை என்றால் பிரச்சனை ஆகிவிடும் என்றும், அது உங்களின் கேரியருக்கு நல்லது அல்ல என கூறியதால், பல்லை கடித்து கொண்டு நடித்து முடித்தார்.
அமலாபால் எதிர்பார்த்தது போலவே, இந்த படத்திற்கு பல பிரச்சனைகள் எழுந்தது. அதே சமயம் இப்படத்தின் மூலம் அமலா பால் யார்? என பலரும் தேட துவங்கினர். இந்த சர்ச்சைகளை மறக்க செய்வது போல் வெளியானது தான் 'மைனா' திரைப்படம். இந்த ஒரே படத்தில், தன்னை தூற்றிய அத்தனை வாய்களையும் அடைத்து, ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றார்.
பின்னர் தமிழ்,மலையாளம், தெலுங்கு, என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வந்த அமலாபால், தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்து நின்றார். இந்த படத்தில் நடிக்கும் போது... இப்படத்தின் இயக்குனர், ஏ.எல்.விஜய்யை காதலிக்க துவங்கினார். இப்படம் வெளியான ஒரே வருடத்தில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் அமலா பால் கவனம் செலுத்தி வந்த நிலையில்... இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனைகளே இருவரையும் விவாகரத்து வரை கொண்டு சென்றது.
விவாகரத்துக்கு பின்னர், பழையபடி படங்கள் நடிக்க துவங்கினார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவுமே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் போனது. குறிப்பாக அமலா பால் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தில் நடிக்கும் போது, தனுஷையும் இவரையும் இணைத்து வைத்து பல கிசுகிசுக்கள் எழுந்தது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் பார்ப்பதற்கு ஒன்றுமே தெரியாத பிள்ளை போல் இருந்தாலும், கொஞ்சம் சிலுமிஷம் செய்பவர் தான். கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு செல்லாமல் அமலா பாலுடன் கூத்தடிப்பதாக செய்திகள் வெளியானது. இதை பார்த்து ரஜினிகாந்த் அமலா பாலின் அப்பார்ட்மெண்டுக்கு சென்று "அவர் குடும்பஸ்தன், அவருக்கு குடும்பம் குழந்தைகள் இருக்கிறது, இப்படி எல்லாம் நடந்து கொள்வது சரியல்ல மீண்டும் இதுபோல் நடப்பதாக எனக்கு தெரிய வந்தால் ரஜினிகாந்தின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்", என்பது போல் எச்சரித்து சென்றதாக கூறியுள்ளார்.
இதற்கு அமலா பால் நீங்கள் உங்க மருமகனை கேட்க வேண்டியது தானே? அப்பார்ட்மெண்டுக்கு வருவதெல்லாம் சரியல்ல என்பது போல் பேசியதாகவும் செய்திகள் வெளியானதாக தெரிவித்துள்ளார். அதேபோல் அமலா பாலின் திரையுலக பயணம் துவங்கியதில் இருந்து, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் அவர் தவிப்பது வரை பல்வேறு விஷயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் செய்யாறு பாலு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடிகை இயக்குனர் பாலாவின் அண்ணன் மகளா? நடிப்பை தொடர்ந்து தயாரிப்பில் இறங்கிய ரஞ்சனா நாச்சியார்!