MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தூக்கத்திலேயே பிரிந்த உயிர்; நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

தூக்கத்திலேயே பிரிந்த உயிர்; நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகராக வலம் வந்த டெல்லி கணேஷ், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 10 2024, 07:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Delhi Ganesh

Delhi Ganesh

தமிழ் சினிமாவில் மனதில் பதியும்படியான குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர்கள் வெகுசிலரே. அதில் டெல்லி கணேஷும் ஒருவர். இவர் கடந்த 1976-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்னர் 1964 முதல் 1974 வரை இந்திய விமானப் படையில் பணியாற்றிய டெல்லி கணேஷை தன்னுடைய பட்டினப் பிரவேசம் படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் கே.பாலச்சந்தர். அதற்கு முன்னர் மேடை நாடகங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.

24
Actor Delhi Ganesh

Actor Delhi Ganesh

இதையடுத்து சினிமாவில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய டெல்லி கணேஷ், உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். இவர் குணச்சித்திர வேடங்கள் மட்டுமின்றி நகைச்சுவைஅ கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டெல்லி கணேஷ்.

இதையும் படியுங்கள்... தமிழக அரசின் சூழ்நிலை சரியில்லையாம்! மத்திய அரசின் செயல்பாடு சிறப்பா இருக்காம்! தெளிவா குழப்பும் டெல்லி கணேஷ்!

34
Delhi Ganesh, Kamalhaasan

Delhi Ganesh, Kamalhaasan

சினிமா மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ், டப்பிங் கலைஞராகவும் இருந்து வந்தார். இப்படி சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்த இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. நடிகர் டெல்லி கணேஷுக்கு 80 வயது ஆகிறது. அவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஆழ்த்தி உள்ளது.

44
Delhi Ganesh Passed Away

Delhi Ganesh Passed Away

டெல்லி கணேஷின் உடன் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அவரின் மறைவு செய்தி அறிந்து திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகின்றனர். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஞ்சலிக்காக வைக்கப்பtடுள்ள டெல்லி கணேஷின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விமான படை முதல் போலீஸ் வேலை வரை - சினிமாவிற்காக அரசு பணியை விட்ட டாப் 4 தமிழ் நடிகர்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
சந்திரகலாவை லெப்ட்-ரைட் வாங்கிய சாமுண்டீஸ்வரி! ஆதாரத்துடன் சிக்கிய வில்லி - இனி கலாவுக்கு இந்த வீட்டில் இடமில்லையா?
Recommended image2
அச்சு அசல் மாதம்பட்டி ரங்கராஜ் போலவே இருக்கும் மகன்! ஜாய் கிரிசில்டா பகிர்ந்த "ஜூனியர் மாதம்பட்டி" வைரல் போட்டோ!
Recommended image3
Now Playing
Movie Review | Kadhal Reset Repeat திரைப்படம் எப்படி இருக்கு ? முழு விவரம் | VJ Viswa
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved