MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Breaking : தங்கலான் படப்பிடிப்பில் விபத்து... நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிந்தது

Breaking : தங்கலான் படப்பிடிப்பில் விபத்து... நடிகர் விக்ரமுக்கு எலும்பு முறிந்தது

தங்கலான் படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட எதிர்பாரா விபத்தில் சிக்கிய நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்தது.

2 Min read
Author : Ganesh A
| Updated : May 03 2023, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். சினிமாவுக்காக தன் உடலை வறுத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் விக்ரமும் ஒருவர். ஐ படத்திற்காக இவர் உடல் எடையை குறைத்தது பலரையும் வியக்க வைத்தது. இதுதவிர ஏராளமான கெட்-அப்களில் நடிக்கும் சவால் மிகுந்த வேடங்களில் நடிப்பதையும் விக்ரம் அதிகம் விரும்புவார். அவரின் நடிப்புக்கு தீணி போடும் வகையில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் அமைந்திருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இதில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து வந்தார். பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சர்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... அனிருத் ரொம்ப பிசியானதால் தேசிய விருது வென்ற இசையமைப்பாளருடன் முதன்முறையாக கூட்டணி அமைத்த சிவகார்த்திகேயன்

34

தங்கலான் படத்திற்காகவும் நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் உடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் நடிகர் விக்ரமும் கலந்துகொண்டார். 

44

நேற்று ஷூட்டிங் தொடங்கும் முன் நடைபெற்ற ஒத்திகையின்போது நடிகர் விக்ரம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவரது விலா எலும்பு முறிந்தது. இதையடுத்து பதறிப்போன படக்குழுவினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளார்களாம். இதனால் நடிகர் விக்ரம் குணமாகும் வரை தங்கலான் ஷூட்டிங்கில் பங்கேற்க மாட்டார் என அவரின் மேலாளர் தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஆஸ்கருக்கு போகும் தங்கலான்...! விக்ரம் - பா.இரஞ்சித் கூட்டணியின் தரமான சம்பவம் லோடிங்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பா. இரஞ்சித்
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved