நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு ஆண் குழந்தை! துரதிஷ்டவசமாக பிறந்ததும் இப்படி ஒரு பிரச்சனையா?
பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை மிகவும் மகிழ்ச்சியாக சமூக வலைதளத்தில் வெளியிட்டு, குழந்தைக்கு பிறந்த பின்னர் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில், திரைப்பட விநியோகஸ்தராக அடி எடுத்து வைத்து, பின்னர் தயாரிப்பாளர், நடிகர் என தன்னை மெருகேற்றிக் கொண்டவர் ஆர்.கே.சுரேஷ். இவர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை சமூக வலைதளத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆர்கே சுரேஷை ஒரு நடிகராக அறிமுகப்படுத்திய பெருமை இயக்குனர் பாலாவையே சேரு. தான் இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் மிக முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷை நடிக்க வைத்தார். இந்த படத்தில் இவர் வெளிப்படுத்திய எதார்த்தமான நடிப்பு, ரசிகர்களை கவரவே... அடுத்தடுத்த படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் குவிந்தது.தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தை தாண்டி, ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார் ஆர்கே சுரேஷ்.
இந்நிலையில் மது லதா என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஆர்.கே.சுரேஷுக்கு, 2001 ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த மது லதாவிற்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை ஆர்கே சுரேஷ் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
ஆனால் துரதிஷ்டவசமாக குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும், கடவுள் அருளால் அவர் தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொள்ளும்படி குழந்தையின் புகைப்படத்தோடு இவர் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.