தாமதமாகும் ஏகே 62! இது சரிப்பட்டு வராதுன்னு திடீரென பைக்கில் உலகசுற்றுலாவை தொடங்கிய அஜித் - வைரலாகும் போட்டோஸ்
நடிகர் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், தற்போது அவர் தனது பைக்கில் உலக சுற்றுலாவை தொடங்கிவிட்டார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், நடிப்பில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் தயாராக உள்ளது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இப்படம் கடைசி நேரத்தில் மகிழ் திருமேனி வசம் சென்றது. லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
வருகிற மே மாதம் ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியாகி ஷூட்டிங்கும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அஜித் தரப்பில் இருந்து ஒரு ஷாக்கிங் அப்டேட் வந்துள்ளது. அது என்னவென்றால், நடிகர் அஜித் தற்போது பைக்கில் உலக சுற்றுலாவை தொடங்கிவிட்டார் என்பது தான். இதுவரை இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த அஜித், அடுத்ததாக நேபாளத்திற்கு சென்றுள்ளார். நேபாளத்தில் அவர் தற்போது பைக் ரைடிங் செய்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... 'சன்னிதானம் PO' படப்பிடிப்பில் இணைந்த 'யோகிபாபு'..!
நடிகர் அஜித் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் உலக சுற்றுலாவை தொடங்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென உலக சுற்றுலாவை தொடங்கிவிட்டதால், ஏகே 62 நிலைமை என்ன ஆச்சு என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. நேபாளத்தில் அஜித் பைக் ரைடிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் இந்த உலக பைக் சுற்றுலாவுக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என பெயரிட்டு உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித்தின் மேனேஜர் தெரிவித்திருந்தார். அஜித் உலக சுற்றுலாவை தொடங்கிவிட்டதால் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என கூறப்படுகிறது.
இந்த உலக சுற்றுலாவில் உலக முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அஜித்தின் இலக்காக உள்ளது. இது அவரின் நீண்ட நாள் ஆசையும் கூட, அந்த ஆசை தற்போது படிப்படியாக நிறைவேறி வருவதால், அவரைப் போல் அவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ஒரே படம்... சம்பள விஷயத்தில் நயன், சமந்தா, ராஷ்மிகாவை பின்னால் தள்ளிய மிருணாள் தாகூர்! மிரட்டுறாங்களே..!