Ajith : பக்தி Mode-ல் அஜித்... பாரம்பரிய உடையணிந்து கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த ஏ.கே - வைரலாகும் போட்டோஸ்
Ajith : கேரளாவிற்கு சென்றுள்ள நடிகர் அஜித் அங்குகள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், வசூலை வாரிக் குவித்தது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
வலிமை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் டபுள் ரோலில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒன்று மங்காத்தா பாணியில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. வில்லன் ரோலுக்காக நீளமான வெள்ளை நிற தாடி, காதில் கடுக்கன் என வித்தியாசமான தோற்றத்துக்கு மாறி உள்ளார் அஜித்.
ஏ.கே.61 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இதுதவிர நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்க ஏ.கே.62 படம் குறித்த அறிவிப்பும் கடந்த வாரம் வெளியானது. அதன்படி போடா போடி, நானும் ரவுடி தான் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித் தற்போது கேரளாவிற்கு சென்றுள்ளார். அங்குள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி அணிந்து கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Kaathuvaakula Rendu Kaadhal :சக்சஸ்புல்லா முடிச்சிட்டோம்! குட் நியூஸ் சொன்ன விக்கி - நயன்... குவியும் வாழ்த்து