MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Kaathuvaakula Rendu Kaadhal :சக்சஸ்புல்லா முடிச்சிட்டோம்! குட் நியூஸ் சொன்ன விக்கி - நயன்... குவியும் வாழ்த்து

Kaathuvaakula Rendu Kaadhal :சக்சஸ்புல்லா முடிச்சிட்டோம்! குட் நியூஸ் சொன்ன விக்கி - நயன்... குவியும் வாழ்த்து

Kaathuvaakula Rendu Kaadhal : சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளது. 

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 31 2022, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் விக்னேஷ் சிவனும் - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் காதலில் விழ காரணமாக இருந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக அந்த ஜோடி தங்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார். இந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல், ஊர்க்குருவி, வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.

24

மேலும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லேடிசூப்பர்ஸ்டார் நயன்தாராவும், நடிகை சமந்தாவும் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.

34

இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ரேம்போ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் நயன்தாரா கண்மணி என்கிற கதாபாத்திரத்திலும், நடிகை சமந்தா கத்திஜா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் இப்படம் மூலம் நடிகர்களாக அறிமுகமாக உள்ளனர்.

44

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுவதுமாக முடிவுக்கு வந்துள்ளது. கடைசியாக டூ டுட்டூ என்கிற பாடலை படமாக்கினர். இதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடனம் ஆடினர். படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Manmadha Leelai : இரண்டாம் குத்து படத்தால் மன்மதலீலைக்கு சிக்கல்! ரிலீசுக்கு தடைகோரிய வழக்கில் ஐகோர்ட் அதிரடி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதி குணசேகரன் ஆட்டம் குளோஸ்... கேன்சல் ஆன ஜாமின்; மீண்டும் சிறை - எதிர்பாரா திருப்பங்களுடன் எதிர்நீச்சல்
Recommended image2
Toxic Postponed : துரந்தர் 2 உடன் மோத பயமா? டாக்ஸிக் ரிலீஸ் திடீரென தள்ளிவைப்பு - பின்னணி என்ன?
Recommended image3
அர்ஜுன் ரெட்டி டூ ஃபேமிலி ஸ்டார்! விஜய் தேவரகொண்டாவின் டாப் 10 ஹிட் மூவிஸ்; 100 கோடி கலெக்‌ஷன் கொடுத்த படம் எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved