- Home
- Cinema
- AjithKumar: அடேங்கப்பா... இதுக்கே பல லட்சம் ஆகி இருக்கும் போலருகே? பிரமிக்க வைக்கும் வலிமை பட போட்டோஸ்!
AjithKumar: அடேங்கப்பா... இதுக்கே பல லட்சம் ஆகி இருக்கும் போலருகே? பிரமிக்க வைக்கும் வலிமை பட போட்டோஸ்!
அவ்வப்போது, வலிமை (Valimai) படத்தில் இருந்து அடுத்தடுத்து, ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் இந்த படத்தின் லிரிக்கல் பாடல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இரண்டு புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்த படத்திற்கு இப்போதே போஸ்டர் அடித்து மாஸ் காட்டி வருகிறார்கள் தல ரசிகர்கள். மேலும் படம் குறித்த குறித்த அப்டேடுகளுக்கும் வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான, கிளிம்சி வீடியோ, மோஷன் போஸ்டர், வேற மாறி லிரிக்கல் பாடல், மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான அம்மா பாடல் போன்றவற்றிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் அஜித்தின் சாகசங்கள் நிறைந்த, கற்பனைக்கு மிஞ்சிய வகையில் பைக் ஸ்டாண்ட் புகைப்படங்களும் சில வெளியாகி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அஜித்தின் ரசிகர்களும், இப்போது இந்த படத்தை வரவேற்கும் விதமாக, தெருமுழுக்க போஸ்டர் ஓட்டுவது, பேனர் வைப்பது என, இறங்கி வேலை செய்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட இரண்டு மாஸ் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் நிறைய போலீஸ் ஜீப்புகள் நிற்பதை பார்க்கமுடிகிறது.
குறிப்பாக இவர் இந்தியன் போலீஸ் உபயோகிக்கும் ஜீப்புகள் அல்ல... அமெரிக்க போலீஸ் உபயோகிக்கும் ஜீப்புகள். மிக பிரமாண்ட இடத்தில் பல ஜீப்புகளை கொண்டு எடுக்கப்பட்ட இந்த படப்பிடிப்புக்கே பல லட்சம் செலவு செய்யப்பட்டிருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படங்களும் அஜித் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.