MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தீபாவளி ரேஸில் வரிசைகட்டும் மாஸ் படங்கள்... ஏகே 61 படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற அஜித் திட்டம்

தீபாவளி ரேஸில் வரிசைகட்டும் மாஸ் படங்கள்... ஏகே 61 படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற அஜித் திட்டம்

AK 61 release date : தீபாவளி ரேஸில் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், ஜெயம் ரவியின் இறைவன் வரிசைகட்டி வருவதால், ஏகே 61 படத்தை பிரம்மாண்டமாக வெளியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Jun 21 2022, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது. போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. நடிகர் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் 90 சதவீதம் படமாக்கப்பட்டுவிட்டதால் அவருக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் அஜித், அங்கு ஜாலியாக பைக் ட்ரிப் சென்றுள்ளார். இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளில் அவர் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

இதையும் படியுங்கள்... ராதிகாவ நான் ஏன் அம்மானு கூப்பிடனும்... அவங்க எனக்கு ஆண்ட்டி தான் - ஓப்பனாக சொன்ன நடிகை வரலட்சுமி

34

அஜித்தின் ஏகே 61 படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது தீபாவளி ரேஸில் கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், ஜெயம் ரவியின் இறைவன் வரிசைகட்டி வருவதால், ஏகே 61 படத்தை பிரம்மாண்டமாக வெளியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதனால் அப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ‘நண்பர்’ அஜித் உடன் இணைந்து நடிக்கும் விஜய்.. சரவெடியாய் தயாராக உள்ள பேன் இந்தியா படம்- சொன்னது யார் தெரியுமா?

44

அதன்படி அஜித்தின் ஏகே 61 படத்தின் ரிலீஸ் தேதியை டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சமீபத்திய தகவல்படி இப்படத்தை டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... விக்ரமில் என்னோட எண்ட்ரி சீனில் நடிக்க பயந்தேன்... ஏன் தெரியுமா? - விஜய் சேதுபதி சொன்ன சீக்ரெட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved