MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘நண்பர்’ அஜித் உடன் இணைந்து நடிக்கும் விஜய்.. சரவெடியாய் தயாராக உள்ள பேன் இந்தியா படம்- சொன்னது யார் தெரியுமா?

‘நண்பர்’ அஜித் உடன் இணைந்து நடிக்கும் விஜய்.. சரவெடியாய் தயாராக உள்ள பேன் இந்தியா படம்- சொன்னது யார் தெரியுமா?

Vijay Ajith film : அஜித்தும், விஜய்யும் இணைந்து நடிக்க மாட்டார்களா என ஏங்கி வந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Jun 21 2022, 07:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வருபவர்கள் விஜய், அஜித். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இவர்களது ரசிகர்கள் எப்போது எலியும் பூனையுமாக தான் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீசானாலே திரையரங்குகளில் திருவிழா போல இருக்கும். அதுவே இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்த படம் ரிலீசானால் என்ன ஆகும். 

24

அஜித்தும், விஜய்யும் இணைந்து நடிக்க மாட்டார்களா என ஏங்கி வந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. விரைவில் நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் இணைந்து ஒரு பேன் இந்தியா படத்தில் நடிக்க உள்ளதாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையும், பன்முகத்திறமை கொண்ட கலைஞருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

34

அஜித் - விஜய் இணைந்து நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்துள்ள அவர், அப்படத்தை அவரது மகன் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகவும் கூறி உள்ளார். கங்கை அமரன் வெளியிட்டுள்ள இந்த மாஸான அப்டேட்டால் விஜய் - அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

44

மறுபுறம் கோலிவுட் வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, அப்படியெல்லாம் எதுவும் இல்லை, அது வெறும் வதந்தி என கூறுகின்றனர். அப்படியென்றால் கங்கை அமரன் எதற்காக அப்படி சொன்னார் என்கிற கேள்வியும் எழத்தொடங்கி உள்ளது. இதில் எது உண்மை என்பதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு தான் பதிலளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... Rajinikanth Salary : ரூ.100 கோடி பத்தாது... ஜெயிலர் படத்துக்காக சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய ரஜினி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image2
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image3
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved